search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணக்குகள் முடக்கம்"

    ரெயில் கொள்ளையர்கள் வாங்கிய சொத்துகளையும், வங்கிகளில் அவர்கள் டெபாசிட் செய்து வைத்துள்ள பணத்தையும் முடக்க தமிழக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney
    சென்னை:

    கடந்த 2015-ம் ஆண்டு சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் மேற்கூரையில் ஓட்டை போட்டு கட்டுக்கட்டாக இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டன. மொத்தம் 5.78 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர், இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முகர்சிங் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மூலம் கொள்ளையர்கள் வாங்கிய சொத்துகளையும், வங்கிகளில் அவர்கள் டெபாசிட் செய்து வைத்துள்ள பணத்தையும் முடக்க தமிழக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதற்கட்டமாக கைதான 7 பேரின் வங்கி கணக்கை போலீசார் முடக்கம் செய்துள்ளனர். அடுத்த கட்டமாக அவர்களது சொத்துகளை முடக்கம் செய்ய இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ×