search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுவிரியன் பாம்புகள்"

    • மருத்துவமனையின் ஸ்கேன் சென்டர் உள்ளே 2 கட்டு விரியன் பாம்பு இருப்பதாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • தீயணைப்புத் துறையினர் அந்த 2 பாம்புகளையும் பிடித்து அந்தியூர் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனை பர்கூர் சாலையில் உள்ளது.

    இங்கு தினமும் அந்தியூர், தவிட்டுப் பாளையம், மைக்கேல் பாளையம், சங்கரா பாளையம், புதுப்பாளையம், சின்னத்தம்பி பாளையம் மற்றும் பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் உள்நோயாளியாகவும் புறநோயாளியாகவும் வந்து சிகிச்சை பெற்று சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில்அரசு மருத்துவமனையின் ஸ்கேன் சென்டர் உள்ளே 2 கட்டு விரியன் பாம்பு இருப்பதாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து நிலைய அலுவலர் ராபர்ட் தலைமையில் வந்த தீயணைப்புத் துறையினர் அந்த 2 பாம்புகளையும் பிடித்து அந்தியூர் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    அவர்கள் வரட்டுப் பள்ளம் மலைப்பகுதியில் உள்ள வனப் பகுதியில் கொண்டு அந்த 2 பாம்புகளையும் விட்டனர். இதனால் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×