search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டண சலுகை"

    • ராமநாதபுரம் வேலு மனோகரன் மகளிர் கல்லூரியில் கட்டண சலுகைகளுடன் மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.
    • இந்த தகவலை கல்லூரி தாளாளர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் தேவிபட்டினம் சாலை மரப்பாலம் அருகே வேலுமனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது.

    இந்த கல்லூரி நிர்வாகத்தினர் ஏழை, எளிய மாணவியர்களுக்கும், மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் கட்டணத்தில் சலுகை வழங்கியும், விடுதியில் சேரும் ஆதரவற்ற மாணவிகளுக்கும் கட்டண சலுகைகளை வழங்கியும் வருகின்றனர்.

    ராமநாதபுரத்தில் இயங்கி வரும் அரசு மகளிர் கல்லூரிக்கு அடுத்த படியாக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மாணவிகளின் திறனறிந்து அதற்கான பயிற்சிகளையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நவீன பாதுகாப்பு வசதியுடன் கல்லூரி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    திறமைமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சியளிக்கபட்டு வருகிறது.கல்லூரி நிறுவனர் பொறியாளர் வேலுமனோகரன் கூறுகையில், 2022-23 ஆண்டுக்கான அட்மிஷன் நடந்து வருகிறது. இந்த ஆண்டில் PG COURSES M.Com., (General) M.Sc., (Computer Science), DIPLOMA COURSES: DMLT (Diploma in Medical Laboratory Technology) ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

    80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கல்விக்கட்டணத்தில் 50 சதவீதமும், 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கல்விக்கட்டணத்தில் 75 சதவீதமும் சலுகைகள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு vmhaetjuly2016@gmail.com என்ற இ-மெயில் வழியாகவும், 9751271999, 9926609012, 6381761488 என்ற மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • ரெயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
    • மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    மநாதபுரத்தில் மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜேசு ராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் ராம கிருஷ்ணன் வரவேற்றார். துணைத்தலைவர் அன்சாரி முன்னிலை வகித்தார்.

    மாவட்ட சமூக நல கண்காணிப்பாளர் முத்துலட்சுமி, மத்திய -மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள், பராமரிப்பு சட்டங்கள் மற்றும் ஹெல்ப் லைன் எண் 14567 பயன்பாடு குறித்து விளக்கினார்.

    இதில் ஓமியோபதி மற்றும் மனநல மருத்துவர் டாக்டர் வித்யா பிரியதர்ஷினி, ஹெல்ப்பேஜ் இந்தியா மேலாளர் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், மாத உதவித்தொகையை ரூ.2000 ஆக உயர்த்த வேண்டும். 2 சிலிண்டர் இணைப்புள்ளவர்களுக்கு மானியத்தொகை ரத்து என்ற தமிழக அரசின் முடிவை கைவிட வேண்டும்.

    கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட ெரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் அனைத்து ெரயில்களும் ராமநாதபுரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆன்மீக சுற்றுலா தலமான இப்பகுதியில் சுற்றுலாசார் தொழில்களை மேம்படுத்த வசதியாக உச்சிப்புளியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசை கேட்டுக் கொள்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    • கொரோனா தொற்று காலம் தொடங்கியது முதல் இந்த சலுகை ரத்து செய்யப்பட்டது.
    • மாற்றுத் திறனாளிகள் உள்பட 4 வகை பயணிகளுக்கு மட்டுமே கட்டண சலுகை.

    ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்றால் ரெயில்வே வருவாய் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த சலுகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சலுகையை மீண்டும் வழங்க ரெயில்வேத்துறை மறுத்து உள்ளது. தற்போதைய நிலையில் மாற்றுத் திறனாளிகள், 11 வகையான நோயாளிகள், மாணவர்கள் உள்பட 4 வகை பயணிகளுக்கு மட்டுமே கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசை நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தி இருக்கிறது. பாஜக தலைவர் ராதாமோகன் சிங் தலைமையிலான இந்த குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

    அதில் கொரோனாவால் ஏற்பட்ட வருவாய் பாதிப்புகளில் இருந்து ரெயில்வே தற்போது மீண்டு வரும் நிலையில், பல்வேறு வகையான பயணிகளுக்கான நியாயமான கட்டண சலுகையை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

    மூத்த குடிமக்களுக்கு கிடைத்த சலுகைகளில் குறைந்தபட்சம் படுக்கை வசதி மற்றும் 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டிகளில் பயணிப்போருக்கு கட்டண சலுகை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப் படக்கூடிய மற்றும் உண்மையிலேயே சலுகை தேவைப்படும் மூத்த குடிமக்கள் மேற்படி வசதியைப் பெற முடியும் என்றும் அதில் குறிப்பிட்டுப்பட்டு உள்ளது.

    • ரெயில் பயணக் கட்டண சலுகை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த முதியோர்கள் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் தாளாளரும், வழக்கறிஞருமான சமூக ஆர்வலர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது:-

    ரெயில் பயணக் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை ரத்து செய்யப்பட்டதால் முழு கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ரெயில் பயணத்துக்கான கட்டணத்தில் 58 வயதைக் கடந்த பெண்களுக்கு 50 சதவீத சலுகையும், 60 வயதைக் கடந்த ஆண்களுக்கு 40 சதவீத சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், சிறப்பு ரெயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டணச் சலுகை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

    சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், வழக்கமான ரெயில் சேவைகளை கடந்த சில நாள்களாக ரெயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது. ரெயில்களில் சமைத்த உணவுப் பொருள்களை விற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பயணக் கட்டணத்துக்கான சலுகைகளை மீண்டும் வழங்குவது தொடர்பாக இன்னும் எந்த முடிவும். எடுக்கப்படாமல் இருப்பது மூத்த குடிமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே மத்திய அரசு ஏற்கனவே இருந்தபடி மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை பயணத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது.
    • மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    புது டெல்லி:

    இந்தியாவில் ரெயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டபோது அனைத்து கட்டண சலுகைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

    பின் ரெயில் போக்குவரத்து தொடங்கியதில் இருந்து மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், 11 விதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் ரயில் பயணத்தில் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகை மீண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என ரெயில்வே அமைச்சகம் இணையத்தில் மறுத்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது. இது போன்ற எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் & மாணவர்களுக்கு மட்டுமே பயண கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×