search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்ட"

    • பெண்கள் கூட்டம் அலைமோதியது
    • குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டமாக நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டமாக நடக்கிறது.

    இதையடுத்து முதல் கட்டமாக முகாம் நடந்த 400 ரேஷன் கடைகளுக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஊழியர்கள் மூலமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது. சுமார் 3 லட்சம் பேருக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்ட நிலையில் 2 லட்சம் 25 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர். முதல் கட்ட முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

    இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் 384 ரேசன் கடை மூலமாக ஏற்கனவே விநி யோகம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று (5-ந்தேதி) முதல் விண்ணப்ப படிவங்கள் பெறப்படுகிறது.

    மேல்புறம், கிள்ளியூர், திருவட்டார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பபடிவங்கள் பெறப்பட்டு வருகிறது.

    முகாமில் விண்ணப்பங்களை ஒப்படைக்க வந்த பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களுடன் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி புத்தகம் மற்றும் மின் கட்டண கார்டு ஆகியவற்றை இணைத்திருந்தனர். ஒரு சில பொதுமக்கள் ஆதார் கார்டை இடைக்கால வங்கி புத்தகத்தை கொண்டு வந்தனர்.

    அப்போது அதிகாரிகள் அதை பரிசோதனை செய்துவிட்டு வங்கி கணக்கில் உடனடியாக ஆதார் கார்டை இணைக்குமாறு கூறினார்கள். ஒரு சில பெண்கள் சில ஆவணங்களை கொண்டு வரவில்லை. அவற்றை எடுத்து வருமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இரண்டாம் கட்ட முகாமில் விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கு முதல் நாள் என்பதால் இன்று அனைத்து மையங்களிலும் கூட்டம் அலைமோதியது. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பெண்கள் விண்ணப்ப படிவங்களை வழங்கினார்கள்.

    வருகிற 16-ந்தேதி வரை விண்ணப்ப படிவங்கள் பெறப்படும். எனவே பொது மக்கள் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட தினத்தில் அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களுக்கு சென்று விண்ணப்ப படிவங்களை வழங்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
    • அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    கன்னியாகுமாரி:

    தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆறுதேசம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளி கள் சிகிச்சைக்கு வருகின்றனர். மாதந்தோறும் 5 முதல் 10 பிரசவம் நடைபெற்று வருகிறது. பிரசவித்த தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் நடைபெற்று வருகிறது.

    இங்குள்ள ஆய்வக பிரிவு, புற நோயாளிகள் பிரிவு மற்றும் குடும்ப நலப்பிரிவு கட்டிடம் போன்றவை பழுதடைந்து உள்ளதால் அவற்றை மாற்றி, புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டி மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை-குடும்ப நலத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் வழங்கினேன். தொடர்ந்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து குரல் கொடுத்தேன்.

    இதன் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், தேசிய சுகாதார திட்டம் சார்பில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை கட்டிடங்கள் அமைக் கப்படும் என்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகி யோருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் எனது சார்பிலும், தொகுதி மக்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

    மேலும் இந்த கட்டிட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்பதனையும் தொகுதி மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • குமாரபாளையம் வார சந்தையில் நூலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் (பொறுப்பு) கமிஷனர் மனு கொடுத்துள்ளனர்.
    • ஏற்கனவே கட்டிடம் கட்டும் இடம் அருகில் ஒரு நூலகமும், கவுரி தியேட்டர் அருகிலும் 2 நூலகங்கள் உள்ளன.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் வார சந்தையில் நூலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் (பொறுப்பு) கமிஷனர் ராஜேந்திரனிடம் மனு கொடுத்துள்ளனர். அதில் அறிவுசார் நூலகம் கட்ட வார சந்தையை தேர்வு செய்து கட்டுமான வேலைகள் நடந்து வருகிறது. ஏற்கனவே கட்டிடம் கட்டும் இடம் அருகில் ஒரு நூலகமும், கவுரி தியேட்டர் அருகிலும் 2 நூலகங்கள் உள்ளன.

    நகரின் மையப்பகுதியான பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகே அரசு இடம் உள்ளது. அங்கு அறிவுசார் நூலகம் கட்டினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். மேலும் வார சந்தையில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் பரப்பளவு குறுகி வருகிறது. இதனால் வார சந்தை நாட்களில் சந்தை வளாகத்தில் கடை அமைக்க முடியாமல் சாலையில் கடைகள் அமைத்து போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

    திருவிழா சமயத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த இந்த வார சந்தையைதான் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே வார சந்தையில் நூலகம் கட்டுமான பணியை, பரிசீலித்து பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகில் நூலகம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
    • இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களா–கவே வீடு கட்டி கொள்ள நிதியுதவி வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

    நலவாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்தல் உள்ள தொழிலாளர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சொந்த வீட்டுமனை வைத்திருந்தால் 300 சதுரடி அளவில் வீடு கட்ட இடவசதி இருக்க வேண்டும். இந்நிலம் அத்தொழிலாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரில் இருக்க வேண்டும். நில உரிமைக்கான பட்டா முறையாக பெற்றிருக்க வேண்டும்.

    நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். அத்தொழிலாளியின் ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    தகுதியானவர்கள் நலவாரிய உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஒரு புகைப்படம், வருமான வரி சான்றிதழ் ஆகியவற்றை tnuwwb.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    கூடுதல் விபரம் அறிய ஈரோடு சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ. பின்புறம் உள்ள ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் அல்லது 0424 2275592 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார். 

    ×