search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்ஆப் மார்க்"

    • 300 முதல் 720 வரையிலான மதிப்பெண் பெற்றவர்கள் ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
    • கட்-ஆப் மார்க் அதிகரிப்பதால் எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர கடுமையான போட்டி நிலவும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் சுய நிதி கல்லூரிகளில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை மாணவ-மாணவிகள் கணக்கிட்டு வருகின்றனர்.

    இது தவிர நிர்வாக ஒதுக்கீட்டிலாவது இடம் கிடைக்குமா என்ற எதிர் பார்ப்பிலும் காத்து இருக்கின்றனர்.

    மேலும் அரசு பள்ளியில் படித்த ஏழை, எளிய மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஆவலில் உள்ளனர். மருத்துவ கலந்தாய்வு 25-ந் தேதி தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. மருத்துவ கனவில் இருக்கும் மாணவ-மாணவிகள் யார் யாருக்கு இந்த ஆண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதை கலந்தாய்வு தொடங்கிய பிறகு தான் தெரிய வரும்.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இந்த ஆண்டில் கட் ஆப் மதிப்பெண்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் 25 முதல் 40 மதிப்பெண்கள் வரை உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பீடும் போது நீட் தேர்வில் இந்த வருடம் மாணவர்கள் மதிப்பெண்களை குவித்தனர். 300க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 37,672 ஆக அதிகரித்து உள்ளது. 300 முதல் 720 வரையிலான மதிப்பெண் பெற்றவர்கள் ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.

    இந்த ஆண்டு பொதுப் பிரிவுக்கு தோராயமாக 600-602 என கட்-ஆப் மார்க் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு அது 580 என்ற அளவில் இருந்தது. இதே போல இந்த முறை பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 554-557 என்றும், பிற்படுத்தப்பட்ட (முஸ்லீம்) பிரிவுக்கு 530-534 எனவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 528-531 எனவும் எஸ்.சி. மாணவர்களுக்கு 420-429 எனவும் மார்க் உயர வாய்ப்பு உள்ளது. எஸ்.டி. பிரிவுக்கு 320-338 ஆகவும் அதிகரிக்கலாம்.

    நீட் தேர்வை பொறுத்த வரை நடப்பு ஆண்டில் தேசிய அளவில் முதல் 10 இடங்களில் 4 தமிழக மாணவர்கள் இடம் பெற்று உள்ளனர். அதே போல முதல் 50 இடங்களில் 6 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்கள் விரும்பிய இடங்கள் தமிழகம் உள்பட நாட்டின் எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    அதற்கு அந்த மாணவர்கள் முன்வரும் பட்சத்தில் அந்த 6 இடங்களும் அதற்கடுத்த நிலையில் உள்ள தமிழக மாணவர்களுக்கு மாநில ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும்.

    கட்-ஆப் மார்க் அதிகரிப்பதால் எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர கடுமையான போட்டி நிலவும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

    ×