search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடித்து குதறிய சிறுத்தைகள்"

    • 200 மீட்டர் தொலைவில் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது
    • கிராம மக்கள் அச்சம்

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனச்சரகத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன.

    யானைகள் அடிக்கடி கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.அதேபோல் சிறுத்தைகளும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வந்தது தற்போது சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி முதலியார் ஏரி வனப்பகுதியை ஒட்டியபடி தோனிகான் பட்டி உள்ளது இங்கு வனப்பகுதியை ஒட்டி ஒரு சில விவசாயிகள் வசித்து வருகின்றனர்.

    அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு சற்று தொலைவில் வன ஊழியர்கள் தங்கும் கொட்டகையும் உள்ளது. அங்கு வசிக்கும் விவசாயி தவமணி வீட்டு கொட்டகையில் கட்டி இருந்த பெரிய ஆடு மற்றும் குட்டி ஆட்டை நேற்று முன்தினம் சிறுத்தைகள் வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று தின்றுள்ளது.

    தவமணி வீட்டிற்கு அருகே வசிக்கும் சிவகுமார் என்பவருக்கு சொந்தமான கொட்டகையில் இருந்த கன்று குட்டி காணவில்லை. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் நேற்று காலையில் வனப் பகுதிக்கு சென்று பார்த்த போது அவர் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது. உடலின் ஒரு பகுதி சிறுத்தைகள் தின்ற நிலையில் இருந்தன இதனையடுத்து சிவக்குமார் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டு விசாரணை செய்ய கன்று குட்டி இருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு கன்றுக்குட்டி இல்லை சிறுத்தைகள் மீண்டும் சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளது தெரியவந்தது இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சிறுத்தைகள் ஆடுகளையும் கன்று குட்டியையும் இழுத்துச் சென்ற சம்பவத்தால் வனப்பகுதியை ஒட்டியபடி வசிக்கும் கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

    ×