search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல்பாசி"

    • தொண்டி கடலில் உணவு மற்றும் மருந்துப்பொருட்களாக பயன்படுத்தப்படும் கடற்பாசிகளை மீனவர்கள் சேகரித்து வருகின்றனர்.
    • இவற்றை உலரவைத்து, குளிர்பானங்கள் உள்பட பல்வேறு உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடலில் உணவு மற்றும் மருந்துப்பொருட்களாக பயன்படுத்தப்படும் கடற்பாசிகளை மீனவர்கள் சேகரித்து வருகின்றனர். கடலில் முத்துக்குளிப்பது போல் கண் கண்ணாடி அணிந்து கடலில் மூழ்கி, நிலத்தில் வளரும் தாவரம் போல் கடலில் வளரும் இந்த கடற்பாசிகளை சேகரிக்கின்றனர். கடலில் மூழ்கி இந்த வகை கடற்பாசிகளை காலை 6 மணி முதல் 10 மணி வரை சேகரிக்கின்றனர்.

    கடலில் எல்லா காலங்களிலும் கிடைக்காத இந்த வகை கடற்பாசிகளை சுமார் 10 அடி ஆழத்தில் தேடி சேகரிக்கின்றனர். கடற்பாசிகளில் கர்க்கம் பாசி, தாள பாசி, பூ பாசி, கஞ்சி பாசி, வேர் பாசி என ஏராளமான வகைகள் உள்ளன. இவற்றை உலரவைத்து, குளிர்பானங்கள் உள்பட பல்வேறு உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது. மேலும் மருந்துப் பொருளாகவும், உரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுவதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ×