search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்"

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு பெண், 2 குழந்தைகளுடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரில் வந்தார். பின்னர் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கூறி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.

    தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பண்ருட்டி அருகே கீழகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி அஞ்சலி (வயது 29) இவருடன் மகள் அனுஷ்கா, மகன் நித்திஷ் ஆகியோர் இருந்தது தெரியவந்தது.கார்த்திக் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து எனக்கு (அஞ்சலிக்கு) குடும்ப சொத்தில் பங்கு இல்லை என உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் வீட்டில் வசித்தால் கொன்று விடுவோம் என மிரட்டி, விரட்டி அடித்ததாகவும் தெரிவித்தனர். இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என பயந்துகொண்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தோம் என தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் போலீசுடன் அஞ்சலி மற்றும் 2 குழந்தைகளை சமூக நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அலுவலகத்தில் தங்க வைத்து உள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×