search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓவியக் கண்காட்சி"

    • மதுரை ரெயில் நிலையத்தில் ஓவியக் கண்காட்சி நடந்தது.
    • சாரண-சாரணியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    மதுரை

    மதுரை ரெயில் நிலையத்தில்உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது. அப்போது சுற்றுச் சூழலை காப்பது தொடர்பாக ரெயில்வே மேல்நிலைப்பள்ளி சாரண- சாரணியர் பங்கேற்ற ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதனை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தொடங்கி வைத்தார். ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் ஆகியோர், 'இயற்கை வளங்களை அழிக்காமல் பொறுப்புடன் பயன்படுத்துவேன், எல்லா வழிகளிலும் நீரை சேமிக்க முயல்வேன், மின்சார உபயோகத்தை குறைக்க முயற்சி எடுப்பேன். இயற்கை வழியில் மின்சாரம் தயாரிக்க உதவுவேன், மட்கும்-மட்காத குப்பைகளை பிரிக்காமல் குப்பை தொட்டியில் போட மாட்டேன். மறுசுழற்சி நடைமுறைகளைக் கடைப்பிடிப்பேன். மரக்கன்றுகளை நட்டு, வளர்த்து பாதுகாப்பேன்" என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    உலக சுற்றுச்சூழல் தினவிழாவில் முதுநிலை கோட்ட பொறியாளர்கள் சதீஷ்சரவணன் (எந்திரவியல்), மகே ஷ்கட்காரி (சுற்றுச்சூழல்), கோட்ட பாதுகாப்பு ஆணையர் வி.ஜே.பி. அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி, பரமக்குடி, ராமேசுவரம், நெல்லை, மீளவிட்டான், செங்கோட்டை, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்கள் மற்றும் பணிமனைகளிலும் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

    ×