search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்"

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
    தேனி:

    தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரைநாள் தர்ணா போராட்டம் நடந்தது. ஓய்வூதியர்களுக்கும், ஓய்வூதியர்களின் குடும்பத்துக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மருத்துவ காப்பீடு திட்டத்தின் அடுத்த 4 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில், ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்கவும், புதிய கோரிக்கைகளை நிறைவேற்றவும் வழிவகை செய்யும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

    போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப.பழனி தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ஆண்டவர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். மாநில செயலாளர் ஆறுமுகம் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில் வட்டக்கிளை செயலாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

    போராட்டத்தின் போது, 4 ஆண்டு காலத்துக்கு ரூ.4 லட்சம் உச்சவரம்பின்றி வழங்க வேண்டும். மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை இரண்டுக்கும் முழுமையான செலவு தொகையை காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்படாமல் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, அங்கன்வாடி, சத்துணவு, கிராம ஊழியர்கள், போக்குவரத்து, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்குழு ஏற்படுத்த வேண்டும். அதில் காப்பீட்டு நிறுவனம்,ஓய்வூதிய சங்க பிரதிநிதிகள், அரசு டாக்டர்கள் இடம்பெற்று இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

    இதில் ஓய்வூதியர்கள் பலர் கலந்துகொண்டனர். காலை 10.30 மணியளவில் தொடங்கிய போராட்டம் பிற்பகல் 2 மணியளவில் முடிவடைந்தது.
    ×