search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓணப்பண்டிகை"

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணப்பண்டிகை 3 நாட்கள் நடந்தது. இதையொட்டிமுதல்நாள் உத்திராடம் நட்சத்திரத்தை யொட்டி சிவப்பு நிறபட்டும் 2-வது நாள் திருவோண நட்சத்திரத்தை யொட்டி கேரள பாரம்பரிய உடையான வெண் பட்டும், 3-வதுநாள்அவிட்டம்நட்சத்திரத்தையொட்டி பச்சைநிறபட்டும் பகவதிஅம்மனுக்கு ஓணக் கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    விழா நாட்களில் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிஷேகம் முடிந்ததும் பகல் 11 மணிக்கு பகவதி அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல்மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்க கவசம், போன்றவை அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்கா ரத்துடன் ஓணக் கோடி பட்டு அணிவித்து அலங்கார தீபாராதனை நடந்தது.

    முன்னதாக 4.30 மணிக்கு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அபிஷேகம் போன்றவை நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, நிவேத்திய பூஜை, உஷ பூஜை, உஷா தீபாராதனை போன்றவை நடந்தது. மதியம் உச்சிகால பூஜையும், உச்சிகால தீபாராதனையும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருளசெய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம்வரச்செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.

    பின்னர் வெள்ளி சிம்மா சனத்தில் அம்மனை எழுந்த ருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • சங்கரன்கோவில், ராஜபாளையம்,மதுரை, மானாமதுரை, திண்டுக்கல், கொடை ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூ வருகை
    • பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து ரோசப்பூ வருகை

    நாகர்கோவில்:

    மலையாள மொழிபேசும் மக்கள் வாழுகின்ற இடமெல்லாம் நகரத்தை காண வரும் மாவேலி மன்னனை வரவேற்க அத்தப்பூ கோலமிட்டு ஓணம் சத்யா விருந்து வைத்து கொண்டாடுவது வழக்கம்.

    கேரளாவில் இன்றைக்கு 4-வது நாளாக ஓணம் கொண்டாடப்படுகிறது. அத்தப்பூ கோலம் இட பலவகை மலர்கள் தேவைப்படுவதால் கேரளா வியாபாரிகளும், பொதுமக்களும் தோவாளை சந்தையில் கூடியுள்ளனர். இன்று 100 டன்கள் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை ஆகி வருகிறது.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பிச்சிபூ ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மற்ற பூக்களால் ஆன கோழிப்பூ ரூ. 70 வாடாமல்லி ரூ.200 கனகாம்பரம் ரூ.1000, முல்லை ரூ.900, சம்பங்கி ரூ.300, அரணி ரூ. 250, தாமரை ரூ. 6, கொழுந்து ரூ.120, துளசி ரூ. 30 என எல்லா பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    ஆரல்வாய்மொழி, தோவாளை, குமாரபுரம் மாவட்ட நாடார் குடியிருப்பு, புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் பிச்சி பூ, சங்கரன்கோவில், ராஜபாளையம்,மதுரை, மானாமதுரை, திண்டுக்கல், கொடை ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூவும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கம்பியூட்டர் ரோசப்பூ வாழை, செண்பகராமன்புதூர், ராஜாவூர், மருங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து உளுந்து ,பச்சை துளசி, அருகம்புல், தாமரை, தோவாளை சந்தைக்கு வந்து மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் செல்லுகிறது.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, ஓணத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இதை விட பூக்கள் வரத்து அதிகமாகவும், விலை உயர்வும் காணப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    ×