search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டு பதிவு"

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. 89.67 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.
    தர்மபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. இதனிடையே தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் சில பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின்போது முறைகேடுகளும், அத்துமீறல்களும் நடைபெற்றதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.அய்யம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் எண் 181, 182, நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் எண் 192, 193, 194, 195, ஜாலிப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண் 196, 197 என மொத்தம் 8 வாக்குச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு 3,074 ஆண் வாக்காளர்களும் 2,985 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 6059 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் கொளுத்தும் வெளிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர். இவர்கள் தர்மபுரி பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு வாக்கும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு வாக்கும் என 2 வாக்குகளை பதிவு செய்தனர்.

    இதையொட்டி 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாராளுமன்ற தேர்தலின் போது இடது கையின் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற்றதால் ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்காளர்கள் மறு ஓட்டுப்பதிவின்போது செல்போனை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.

    வாக்குச்சாவடிகளை பாராளுமன்ற பொதுத்தேர்தல் பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா, கலெக்டர் மலர்விழி, போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6,059 வாக்காளர்கள் கொண்ட இந்த 8 வாக்குச்சாவடியிலும் 5,433 பேர் ஓட்டு போட்டனர். இது 89.67 சதவீதம் ஆகும்.

    டி.அய்யம்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களிக்க காலதாமதம் ஏற்படுவதாக கூறி அலுவலர்களிடம் வாக்காளர்கள் வாக்குவாத்தில் ஈடு பட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். ஜாலிப்புதூர் பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் திரண்டு இருந்தனர். தகவல் அறிந்த கூடுதல் சூப்பிரண்டு மணிகண்டன் அதிரடிப்படை போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கு திரண்டு இருந்த கட்சி நிர்வாகிகளை கலைந்து செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியால் ஓட்டுப்பதிவு பாதிக்காது என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். #ParliamentElection #ChitraPournami
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை நகரில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகையன்றும், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி இரவு சுமார் 7 மணிக்கு தொடங்கி மறுநாள் 19-ந் தேதி மாலை சுமார் 5 மணியளவில் நிறைவடைகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறியதாவது:-

    இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. முன்னதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தபோது உரிய ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கூறப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையிலும், திருவண்ணாமலை நகர பகுதியிலும் 250-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது. இந்த வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவின் போது தடையோ, சிரமமோ, அபாயம் ஏற்படுமா? என்று பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டது.



    காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சித்ரா பவுர்ணமி கிரிவலம் இரவு 7 மணிக்கு தான் ஆரம்பிக்கிறது. அதனால் அங்குள்ள பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி வாக்குப்பதிவு செய்து கொள்ளலாம். நகரத்திற்குள் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் அதிகபட்சம் 2 கிலோ மீட்டரில் இருந்து 1½ கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளது. அதனால் சித்ரா பவுர்ணமியின் போது வாக்குப்பதிவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

    கிரிவலம் செல்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வருபவர்கள் பயண நேரத்தை கணக்கு செய்து வர வேண்டும்.

    2 வாக்கு எண்ணும் மையங்கள் கிரிவலப்பாதையில் உள்ளது. கிரிவலப் பாதையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வாக்கு பொருட்களை கொண்டு செல்ல சிரமங்கள் உள்ளதா, மாற்று வழி உள்ளதா என்று காவல் துறையினருடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறோம். எதுவும் முடியாத பட்சத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் மாற்ற மாநில தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ParliamentElection  #ChitraPournami



    ×