search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#ஒகேனக்கல்"

    • கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது.
    • நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள சீனி பால்ஸ், ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    ஒகேனக்கல்:

    தமிழக கர்நாடகா காவிரி எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.

    கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றின் வழியாக உபரிநீர் வினாடிக்கு 883 கன அடியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தற்போது கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1195 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 583 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளன.

    அதேபால கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 243 கன அடியாக உள்ள நிலையில், நீர்வெளியேற்றம் என்பது வினாடிக்கு 300 கன அடியாக உள்ளது.

    கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி எல்லைப்பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலையும் ஒகேனக்கல்லுக்கு அதே அளவில் நீர்வரத்து நீடித்து வருகிறது.

    இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள சீனி பால்ஸ், ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வரை வினாடிக்கு தொடர்ந்து 4 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தன.
    • நீர்வரத்தால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்ட உபரிநீர்- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வரத்தொடங்கியுள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வரை வினாடிக்கு தொடர்ந்து 4 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 3039 கன அடி நீர் வெளியேற்றப்பட்டன.

    இந்த நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு இந்த நீர்வரத்தானது நள்ளிரவு முதல் வரத்தொடங்கியுள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இந்த நீர்வரத்தால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    • தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக வரும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
    • நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிற நிலையில், தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளான, அஞ்செட்டி, ஒகேனக்கல், நாட்றம்பாளையம் ஆகிய வனப்பகுதிகளில் கன மழை பெய்தது.

    இதனால் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக வரும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று வரை வினாடிக்கு 2000 கனஅடியாக இருந்த நீர்வரத்தானது கனமழை காரணமாக படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை நேரத்தில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்தானது மேலும் படிப்படியாக அதிகரித்து இன்று காலை வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து வருகிறது.

    இந்த நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. மேலும் தற்போது 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள இந்த நீர்வரத்து, சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்தே அதிகரிக்கவோ குறையவோ வாய்ப்பு உள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிற நிலையில் தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகின்றன.
    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிக அளவில் ஏற்பட்ட நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் கரையோர பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் மழை குறைந்ததால், கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

    மேலும், கர்நாடகா மாநிலத்தில் தண்ணீர் விட மறுத்து அந்த மாநில அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    இதன் காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி அளவில் வினாடிக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் மழை பொய்த்து போனதால் கடந்த சில நாட்களாக அங்குள்ள அணைகளில் இருந்து நீர்திறப்பு முற்றிலும் நிறுத்திவிட்டதால், தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். கடந்த சில நாட்களாக கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், அவ்வப்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையாலும் கடந்த 2 தினங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 1500 கனஅடியாக நீடித்து வந்து கொண்டிருந்தது.

    இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் அளவு குறைந்து பாறை திட்டுகளாக காட்சியளித்தது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிற நிலையில் தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகின்றன.

    இதனால் தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று வரை வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்தானது படிப்படியாக தற்போது அதிகரித்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.

    திடீரென ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிக அளவில் ஏற்பட்ட நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    மேலும் தற்போது 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள இந்த நீர்வரத்து, பெய்யும் மழையைப் பொறுத்து அதிகரிக்கவோ குறையவோ வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது.

    • ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
    • நீர்வரத்து சரிவினால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சரிந்து பாறை திட்டுக்கள் வெளியே தெரிகின்றன.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடக அணைகளில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைத்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாக சரிந்துள்ளது.

    தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லை பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை முற்றிலும் குறைந்துள்ளதாலும், கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து ஆனது நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3,000 கன அடியாக சரிந்தது. நீர்வரத்து சரிவினால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சரிந்து பாறை திட்டுக்கள் வெளியே தெரிகின்றன.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து வருவதால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

    • ஒகேனக்கல்லில் கடந்த 9 தினங்களாக நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தது.
    • மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பென்னாகரம்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் கடந்த 9 தினங்களாக நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் சரிந்து 4 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    இதன்காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறாக பாய்ந்து ஓடுகிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஒகேனக்கல்லுக்கு நேற்று 2000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை படிப்படியாக உயர்ந்து நிலவரப்படி 9500 கன அடியாக அதிகரித்துள்ளது.
    • நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது.

    ஒகேனக்கல்:

    காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 7 ஆயிரம் கன அடி உபரி நீர் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து நேற்று 5603 கன அடியாக குறைந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்டது.

    கடந்த சில தினங்களாக தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும் தமிழக-கர்நாடாக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று முதலே அதிகரிக்க தொடங்கியது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று 2000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை படிப்படியாக உயர்ந்து நிலவரப்படி 9500 கன அடியாக அதிகரித்துள்ளது.

    இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது.

    கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடாக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தமிழகம் வந்தடைந்தது.
    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.

    பென்னாகரம்:

    கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் நீர்வரத்து அதிரிக்க தொடங்கியது.

    கிருஷ்ணராஜ சாகர் அணையில் கனமழை காரணமாக இன்று காலை, வினாடிக்கு நீர்வரத்து 5845 கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக, அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் 2673 கனஅடி வெளியேற்றப்பட்டது.

    இதேபோன்று கபினி அணைக்கு இன்று காலை, நீர்வரத்து 2359 கன அடி வந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் இன்று காலை 4 ஆயிரத்து 673 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

    காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடாக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தமிழகம் வந்தடைந்தது.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    இதன் காரணமாக கடந்த 2 தினங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீடித்து இருந்தது. இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீராலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும் ஒகேனக்கல்லுக்கு இன்று வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இந்த நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து சென்றன.
    • சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    பென்னாகரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    இதன் காரணமாக தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக இருந்தது.

    இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தும் படிப்படியாக சரிந்து நேற்று முன்தினம் 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இந்த நிலையில் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதன்காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து சென்றன. இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு இன்று குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் பரிசலில் சவாரி செய்தனர்.

    • காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக வந்தது.
    • நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தருமபுரி:

    காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. ஆனால் தற்போது நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வினாடிக்கு 2ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும்.

    இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியாக நீடித்து வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் தற்போது கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக வந்தது. மேலும் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதற்கிடையே இன்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் எண்ணை மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் பரிசலில் சென்று சவாரி செய்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக மீன் கடைகள், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொது மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவை பிலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • ஒகேனக்கல்லுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீர்வரத்தானது 11 ஆயிரம் கன அடி வரை அதிகரித்து வந்தது.
    • நீர்வரத்து காரணமாக சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்திருந்தது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டதாலும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    ஒகேனக்கல்லுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீர்வரத்தானது 11 ஆயிரம் கன அடி வரை அதிகரித்து வந்தது. இந்த நீர்வரத்து காரணமாக சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்திருந்தது.

    இதனைத் தொடர்ந்து கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டதாலும் காவிரி நீர் பிடிப்பதில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 6500 கன அடியாகவும் சரிந்தது.

    இந்த நீர் வரத்து குறைவால் கடந்த 3 நாட்களாக பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    • ஒகேனக்கல்லுக்கு தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
    • பரிசல் இயக்க தடை காரணமாக வார விடுமுறையான நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளின் நீர் திறப்பு எதிரொலியால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வார விடுமுறையால் நேற்று பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு சுமார் 9 ஆயிரம் கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி கரையோர பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், பிலிகுண்டுலு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இணைவு பெறும் தொட்டல்லா ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்தானது நேற்று முன்தினம் 11ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 9 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    ஒகேனக்கல்லுக்கு தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது. அதனை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்த தடை இன்று 3-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பரிசல் இயக்க தடை காரணமாக வார விடுமுறையான நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இருப்பினும் வந்திருந்து சுற்றுலா பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியல் குளித்தும், தொங்கு பாலத்தின் மீது ஏறி அருவியின் அழகை கண்டு ரசித்தனர். காவிரி ஆற்றில் பரிசில் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வந்திருந்த சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    மேலும் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவி செல்லும் நடைபாதை, மீன் விற்பனை நிலையம், உணவருந்தும் பூங்கா, முதலைகள் மறுவாழ்வு மையம், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சொற்ப அளவிலான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.

    ×