search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஸ்வர்யா ரஜினி"

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

    நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் லால்சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிக்கிறார். மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

    இந்நிலையில், லால்சலாம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் திருவண்ணாமலையில் நடந்தது. அதில், நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தோன்றும் முக்கிய காட்சிகள் திருவண்ணாமலையை சுற்றி உள்ள சில பகுதிகளிலும், செஞ்சி சுற்று வட்டார கிராமங்களிலும் படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.



    அதற்காக, நடிகர் ரஜினிகாந்த் நேற்று திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். தனியார் விருந்தினர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் தங்கி இருப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள ஊத்தாம்பாடி கிராமத்தில் உள்ள விவசாய பண்ணையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.



    ரஜினியின் படபிடிப்பு நடப்பதால் அங்கு ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் மீது தீவிர பக்தியும் ஈடுபாடும் கொண்ட ரஜினிகாந்த், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கு மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார். எனவே, லால்சலாம் படபிடிப்பு முடியும் போது அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்வார் எனவும், கிரிவலம் செல்ல வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

    • ஈஸ்வரியிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை, ஆல்பத்தில் உள்ள போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த வழக்கில் மேலும் 43 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை வேலைக்காரப் பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து சிறிது சிறிதாக திருடி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

    இதுதவிர வெள்ளி மற்றும் வைர நகைகளும் மீட்கப்பட்டன. வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி திருடிய நகைகளை விற்று அதில் சோழிங்கநல்லூர் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கி போட்டிருப்பதும், குடும்பத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

     


    கணவருக்கு காய்கறி கடை, மகளுக்கு மளிகை கடை ஆகியவற்றை வைத்துக் கொடுத்திருப்பதுடன் இன்னொரு மகளுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனாம்பேட்டை போலீசில் ஐஸ்வர்யா அளித்த புகாரில் குறிப்பிட்டிருப்பதை விட அதிக அளவில் கூடுதல் நகைகள் வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டிருப்பதுதான் இந்த வழக்கில் போலீசாரை அடுத்த கட்ட விசாரணைக்கு தள்ளி இருக்கிறது.

    இதையடுத்து திருடப்பட்ட நகைகள் தொடர்பாக கூடுதல் விவரங்களை திரட்ட போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ஐஸ்வர்யாவின் லாக்கரில் சோதனை நடத்தி அவரிடமும் விசாரிக்க போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. ஐஸ்வர்யா போலீசில் புகார் அளித்தபோது தனது சகோதரி சவுந்தர்யா திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் அடங்கிய போட்டோ ஆல்பம் ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்த திருமணத்தின் போது ஐஸ்வர்யா அணிந்திருந்த விலை உயர்ந்த நகைகள் திருடப்பட்டிருந்தன. இதைதொடர்ந்து வேலைக்காரப் பெண் ஈஸ்வரியிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை, ஆல்பத்தில் உள்ள போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்த்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.


    ஐஸ்வர்யா ரஜினி

    ஐஸ்வர்யா ரஜினி

    மேலும், இந்த வழக்கில் மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவரிடம் இருந்து 340 கிராம் நகை மீட்கப்பட்டது. திருட்டு நகைகளை வாங்கியதாக வினால்க் சங்கரை போலீசார் கைது செய்தனர். நேற்று ஐஸ்வர்யா வீட்டு வேலைக்கார பெண் ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசன் ஆகியோரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதியளித்துது.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட வீட்டின் பணியாளர் ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசனிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு மேலும் சூடுபிடித்துள்ளது.

    • இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த்.
    • ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 47 ஆண்டுகாலம் ஆனதை அவருடைய மகள் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

    1975-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன்பின்னர் இவரின் நடிப்பின் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்து பல படங்களின் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான பைரவி, முள்ளும் மலரும், பில்லா, காளி, ஜானி, படிக்காதவன், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து நடித்து முன்னணி நடிகராக மாறினார். தமிழ் திரையுலகில் மட்டும்மல்லாது இந்திய திரையுலகிற்கு முன்னணி கதாநாயகனாக உருவெடுத்திருக்கும் ரஜினி திரையுலகிற்கு வந்து 47 வருடங்களாகியுள்ளது.

     

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    இந்த நெகிழ்ச்சியான தருனத்தை அவரது மகள் ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தின் மூலம் கொண்டாட்டமாக பகிர்ந்திருக்கிறார். இந்த ஆண்டு இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாடப்படும் அதேவேளையில் அவருடைய தந்தையின் திரைவாழ்க்கையை குறிக்கும் வகையில் ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ரஜினி - லதா ரஜினி

    ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ரஜினி - லதா ரஜினி

     

     அதில், சுதந்திரத்தின் 76 ஆண்டுகள் தியாகங்களுக்கும், போராட்டங்களுக்கும் வலிமைக்கும் வணக்கம். பெருமைமிக்க 47 வருட ரஜினிசம், கடின உழைப்பு அர்ப்பணிப்பு! அவருக்கு பிறந்ததில் பெருமை, பெருமை மகள் என்று குறிப்பிட்டு, அதோடு ரஜினிக்கு தேசியக்கொடியை குத்தி விடும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த பதிவு அனைவரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.

    ×