search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல்2018"

    • ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் '2018'.
    • இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

    ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில் உருவான '2018' மலையாள திரைப்படம், கடந்த மே 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த 2018-ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது

    இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சர்வதேச அளவில் சுமார் 160 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ள இப்படம், மலையாளத்தில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.


    2018
    2018


    இந்த படம் தற்போது ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது. தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போதே '2018' திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட்டதைக் கண்டித்து கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

    இதன்படி 'ஃபிலிம் எக்ஸிபிட்டர்ஸ் யுனைடெட் ஆர்கனைசேஷன் ஆஃப் கேரளா' (FEUOK) உடன் இணைந்து கேரளாவில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் தங்கள் தியேட்டர்களில் ஜூன் 7, 8 ஆகிய இரண்டு நாட்களுக்கு அனைத்து திரைப்பட காட்சிகளையும் ரத்து செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஜூட் ஆண்டனி ஜோசப்.
    • இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘2018’.

    மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் '2018'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார்.


    ஜூட் ஆண்டனி ஜோசப்

    கடந்த 2014-ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஓம் சாந்தி ஒஷானா' படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த திரைப்படம் பார்வையாளர்களை முழு அளவில் திரையரங்கிற்கு அழைத்து வரும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ம் தேதி ஆரம்பிக்க உள்ள நிலையில் அதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    நெல்லை:

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி டி.என்.பி.எல். போட்டியின் மீடியா மேலாளர் டாக்டர் பாபா, கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், இந்த்ராஜித், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி விசுவநாதன் ஆகியோர் நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 11-ந்தேதி தொடங்கும் 3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்க உள்ளன. மாலை 3.15 மணி, இரவு 7.15 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும் போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நெல்லையில் முதல் சீசனில் 8 ஆட்டங்களும், 2-வது சீசனில் 13 போட்டிகளும் நடந்தன. தற்போது 14 போட்டிகள் நடத்தப்படுகிறது.

    நெல்லையில் 11-ந் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் 8 அணிகளின் கேப்டன்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. டிக்கெட் கட்டணம் கடந்த ஆண்டை போன்றே ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #TNPL2018 #NammaOoruNammaGethu
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. #NEDvIRE #IREvNED

    ரோட்டர்டேம்:

    நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் போட்டியில் நெதர்லாந்து அணி அயர்லாந்தை வீழ்த்தியது. இத்தொடரின் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷனான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஸ்டிர்லிங் 27 ரன்களிலும், ஜேம்ஸ் 31 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வில்லியம் போர்டர்பீல்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த சிமி சிங் 13 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

    கேரி வில்சன் மட்டும் சற்று நிலைத்து நின்று விளையாடினார். எதிர் முனையில் வந்தவர்கள் பிரகாசிக்க தவறியதால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. கேரி வில்சன் 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நெதர்லாந்து அணி பந்துவீச்சில் ரோலோப் வேன் டெர் மெர்வ் 2 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது. நெதர்லாந்து அணியின் தோபியாஸ் விசே, மேக்ஸ் ஓதவ்த் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தோபியாஸ் 25 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் கூப்பர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேக்ஸ் ஓதவ்த் நிதானமாக விளையாடி 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

    அதைத்தொடர்ந்து பஸ் டி லீடே 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ரோலோப் வேன் டெர் மெர்வ், பீட்டர் சீலர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். வேன் டெர் மெர்வ் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பீட்டர் சீலர் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். நெதர்லாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் ஜார்ஜ் டாக்ரெல் 2 விக்கெட் வீழ்த்தினார். 

    இதைத்தொடர்ந்து வருகிற 16-ம் தேதி நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #NEDvIRE #IREvNED
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. #NEDvIRE #IREvNED

    ரோட்டர்டேம்:

    நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நேற்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து நெதர்லாந்து அணியின் தோபியாஸ் விசே, மேக்ஸ் ஓதவ்த் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தோபியாஸ் 15 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் கூப்பர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேக்ஸ் ஓதவ்த் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து சாகிப் சுல்பிகர் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.



    அதன்பின் பஸ் டி லீடே, பீட்டர் சீலர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். சீலர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். லீடே 33 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் பேரி மெக்கர்த்தி, சிமி சிங் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 

    அதைத்தொடர்ந்து 145 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டூவர்ட் தாம்ப்சன், பால் ஸ்டிர்லிங் ஆகியோர் களமிறங்கினர். தாம்ப்சன் 15 ரன்களிலும், ஸ்டிர்லிங் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்தவர்கள் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.



    இதனால் அயர்லாந்து அணி 63 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. இறுதியில் சிமி சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நெதர்லாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. சிமி சிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணி பந்துவீச்சில் பீட்டர் சீலர் 3 விக்கெட்களும், ஷேன் ஸ்னாடர் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

    இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #NEDvIRE #IREvNED
    ×