search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆப் பேம்"

    இந்தியாவின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் இன்று அதிகாரப்பூர்வமாக ஹால் ஆஃப் ஃபேம் கவுரவ பட்டியலில் இணைந்தார். #IndvWI #BCCI #Dravid
    ‘ஹால் ஆஃப் பேம்’ என்பது கிரிக்கெட்டில் வீரர்கள் செய்த சாதனை, பங்களிப்பு ஆகியவற்றுக்காக ஐசிசி வழங்கும் கவுரவ பட்டமாகும். இந்த கவுரவ பட்டியலில் இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் இணைக்கப்படுவார் என்ற ஐசிசி தெரிவித்திருந்தது.

    இன்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கு முன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஹால் ஆஃப் பேம் பட்டத்திற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை டிராவிட்டிடம் வழங்கினார். இதன்மூலம் ராகுல் டிராவிட் கவுரவமான இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.



    164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் டிராவிட் 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்து 889 ரன்களையும் குவித்துள்ளார். ‘ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் ஏற்கனவே இந்தியாவின் பிஷன் சிங் பேடி, கபில்தேவ், கவாஸ்கர், அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
    ×