search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரி முதலை"

    ஜெயங்கொண்டம் வங்குடி ஏரியில் முதலை நடமாட்டம் உள்ளதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகிலுள்ள வங்குடி கிராமத்தில் சிவன் கோவில் அருகில் உள்ள ஏரியில் நேற்றுமுன் தினம் சிறுவர்கள், மற்றும் பெண்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அருகில் முதலை படுத்திருப்பதை சிறுவர்கள் பார்த்தனர். உடனடியாக அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு ஓடி விட்டனர்.

    இதனால் வங்குடி கிராமத்திலுள்ள அனைத்து பொது மக்களும் அந்த ஏரியில் குளிக்கச் செல்வதற்கும், துணி துவைப்பதற்கும், கால் நடைகளை குளிப்பாட்டவும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    முதலை கடித்து விடும் என்ற அச்சத்தில் பொது மக்கள் ஏரியில் இறங்காமல் பீதியில் உள்ளனர். இது குறித்து அதிகாரிகளுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறியுள்ளனர்.

    பொது மக்கள் முதலை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து முதலைப்பண்ணைஅல்லது முதலைகள் வசிக்கும்அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் கொண்டு போய்விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள் வருவாய்துறையினர் தலையிட்டு உடனடியாக இதை செயல் படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×