search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழுத்தாளர் ராமகிருஷ்ணன்"

    சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். #SahityaAkademi #WriterRamakrishnan #EdappadiPalaniswami
    சென்னை:

    30 ஆண்டுகளாக தமிழ் எழுத்துலகில் பணியாற்றி வரும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் விருதுநகரின் மல்லாங்கிணறை பூர்வீகமாக  கொண்டவர்.  சென்னையில் தற்பொழுது வசித்து வருகிறார்.  கடந்த 1984ம் ஆண்டில் இருந்து சிறுகதை, நாவல் ஆகியவற்றை எழுதி வருகிறார்.

    இதற்கிடையே, 'சஞ்சாரம்'  என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு இலக்கியத்திற்கான உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.



    இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

    எளிய நடையில் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் பல சிறுகதைகள், நாவல்களை படைத்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமிழ் எழுத்துக்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். அவருக்கு விருது அறிவித்திருப்பது அவரது புகழுக்கு மணி மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது.

    தமிழகத்துக்கு பெருமை சேர்த்த எஸ் ராமகிருஷ்ணனுக்கு மக்கள் சார்பில் எனது பாரட்டுகள். மேன்மேலும் இதுபோல் பல்வேறு விருதுகள் பெற வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். #SahityaAkademi #WriterRamakrishnan #EdappadiPalaniswami
    ×