search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்"

    • உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு வரலாறு காணாத வகையில் பலமடங்கு அதிகரித்து வருகிறது.
    • இந்திய சந்தையிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் கணிசமான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன.

    தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் மேட்டர், இந்தியாவில் முதல் முறையாக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பெயர் அறிவிக்கப்படவில்லை. எனினும், இதன் விவரங்கள் மட்டும் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த மாடல் எப்போது வெளியாகும் என்ற விவரங்களும் மர்மமாகவே உள்ளது.

    மேட்டர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மோட்டார்சைக்கிள் நேக்கட் ஸ்டைல் மற்றும் ஷார்ப் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் ஆங்குலர் கேசிங்கில் எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பாடி முழுக்க ரேஸ் நம்பர்கள் கிராஃபிக்ஸ்-ஆக வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிளில் 7 இனஅச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, கனெக்டெட் ஸ்கிரீன் ரிமோட் லாட் / அன்-லாக், ஜியோஃபென்சிங், லைவ் லொகேஷன் டிராக்கிங், வெஹிகில் ஹெல்த் மாணிட்டரிங், சார்ஜிங் விவரங்கள், புஷ் நேவிகேஷன் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் கீலெஸ் ஸ்டார்ட் வசதியை கொண்டிருக்கிறது. இதன் இருபுறமும் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய மேட்டர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 10.5 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கிறது. இத்துடன் "ஹைப்பர்ஷிஃப்ட்" மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது மோட்டார்சைக்கிள் திறனை அதிகப்படுத்தி, வேறு எந்த மாடலும் வழங்காத ரேன்ஜ் வழங்கும் என மேட்டர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் 5 கிலோவாட் ஹவர் மேட்டர் எனர்ஜி 1.0 பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இதன் பவர்பேக் உடன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ரோட்டார் மற்றும் ஸ்டேட்டர்-ஐ குளிர்ச்சியூட்டும். இதன் டிரைவ்டிரெயின் மேட்டர் நிறுவன ஆலையில் மிக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுடன் 1 கிலோவாட் இண்டெலிஜெண்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

    இந்த சார்ஜர் மேட்டர்சார்ஜ் 1.0 என அழைக்கப்படுகிறது. இதை கொண்டு மோட்டார்சைக்கிளை எந்த விதமான 5A, 3-பின் பிளக் பாயிண்ட் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சார்ஜர் மோட்டார்சைக்கிளை ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விடும். இது ஒவர் சார்ஜ் ப்ரோடெக்‌ஷன் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை சப்போர்ட் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வினியோகம் பற்றிய புது தகவல் வெளியாகி உள்ளது.
    • புதிய டார்க் கிராடோஸ் மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    பூனேவை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான, டார்க் மோட்டார்ஸ் தனது கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வினியோகம் தீபாவளி முதல் துவங்கும் என தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக மும்பையில் டார்க் கிராடோஸ் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்- டார்க் கிராடோஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டர்டு மற்றும் ஆர் என இரண்டு வேரிண்ட்களில் கிடைக்கிறது. இவை முறையே 7.5 கிவோவாட் மற்றும் 9 கிலோவாட் செயல்திறன் வெளிப்படுத்துகின்றன.

    டார்க் கிராடோஸ் ஆர் வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு மாடல் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இரு வேரியண்ட்களின் பேட்டரி ரேன்ஜ் ஒரே மாதிரியே வழங்கப்பட்டு இருக்கிறது.

    கிராடோஸ் மாடல் இகோ மோடில் 120 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என்றும் சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடில் முறையே 100 கிலோமீட்டர் மற்றும் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. ஆர் வேரியண்ட்டில் உள்ள பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரமே ஆகும்.

    இந்திய சந்தையில் டார்க் கிராடோஸ் ஸ்டாண்டர்டு மாடல் விலை ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் என்றும் ஆர் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 37 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் ரெவோல்ட் ஆர்வி400 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    • அல்ட்ராவைலட் நிறுவனத்தின் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இரு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த அல்ட்ராவைலட் ஆட்டோமொடிவ் நிறுவனம் இந்திய சந்தையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை நவம்பர் 27 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. முன்னதாக 2019 வாக்கில் அல்ட்ராவைலட் நிறுவனம் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் தான் இந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது.

    2019 மாடலுடன் ஒப்பிடும் போது, F77 மாடலில் தற்போது புதிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் செல்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் 130 முதல் 150 கிலோமீட்டர் வரை செல்லும் என அல்ட்ராவைலட் ஆட்டோமோடிவ் தெரிவித்தது.

    அல்ட்ராவைலட் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் உள்ள பிஎல்டிசி மோட்டார் 33 ஹெச்பி பவர், 90 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த பைக் மணிக்கு 147 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், முன்புறம் யுஎஸ்டி போர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், முன்புறம் 320எம்எம் மற்றும் பின்புறம் 230எம்எம் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரைடு மோட்கள் மற்றும் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
    • விடா பிராண்டிங்கில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் திட்டம் இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிரிவாக விடா பிராண்டு உருவாக்கப்பட்டது. ஹீரோ விடா பிராண்டிங்கின் கீழ் V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

    விடா பிராண்டில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், ஸ்கூட்டரை தொடர்ந்து எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளும் விடா பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து இருக்கிறது.

    "ஒட்டுமொத்த சந்தையிலும் முதலில் ஸ்கூட்டர் அறிமுகம் செய்வதே வழக்கமாக உள்ளது. கிட்டத்தட்ட அனைவரும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், சிலர் மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளனர். அந்த வகையில், நாங்கள் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்வதை ஏற்கனவே அறிவித்துவிட்டோம். நிச்சயமாக மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அறிமுகம் செய்கிறோம்," என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சல் தெரிவித்து இருக்கிறார்.

    ஹீரோ விடா V1 மாடல் இந்திய சந்தையில் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஓவர் தி ஏர் அப்டேட்கள், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், கீலெஸ் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், எஸ்ஒஎஸ் அலெர்ட், டு-வே திராட்டில் என ஏராள அம்சங்கள் உள்ளன. இத்துடன் இகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    • ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் ஆக்சோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த எலெக்ட்ரிக் பைக் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனம் ஆக்சோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹாப் ஆக்சோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக் ஸ்டாண்டர்டு மற்றும் X என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இரண்டு வேரியண்ட்களிலும் IP67 தர சான்று, 3.75 கிலோவாட் பேட்டரி, மல்டி மோட் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங், 4ஜி கனெக்டிவிட்டி, பிரத்யேக மொபைல் செயலி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் செயலியில் ஸ்பீடு கண்ட்ரோல், ஜியோ பென்சிங், ஆண்டி தெப்ட் சிஸ்டம் மற்றும் ரைடு விவரங்களை பார்க்க முடியும். இதன் பேஸ் வேரியண்ட்- இகோ, பவர் மற்றும் ஸ்போர்ட் மூன்று ரைடு மோட்களை கொண்டிருக்கிறது.

    ஹாப் ஆக்சோ X வேரியண்டில் கூடுதலாக டர்போ மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 90 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மணிக்கு 0 முதல் 40 கிமீ வேகத்தை வெறும் நான்கே நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயணிக்க முடியும். இந்த பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் ஆகும்.

    அறிமுக நிகழ்வுக்கு முன்பாகவே இந்த மோட்டார்சைக்கிளை வாங்க சுமார் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனர், தலைமை செயல் அதிகாரி கேத்தன் மேத்தா தெரிவித்துள்ளார். புதிய ஹாப் ஆக்சோ விற்பனை அந்நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் செண்டர் மற்றும் வலைதளத்தில் நடைபெறுகிறது.

    • டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிராடோஸ் மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
    • சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 75 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு கட்டணத்தை அதிரடியாக குறைத்து இருக்கிறது. அந்த வகையில் டார்க் கிராடோஸ் மாடலை முன்பதிவு செய்வோர் ரூ. 75 மட்டுமே செலுத்தினால் போதும். இந்த சலுகை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன் பின் முன்பதிவு கட்டணம் ரூ. 999 என மாறி விடும்.

    இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டர்டு மற்றும் கிராடோஸ் R என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    கடந்த மாதம் தான் டார்க் கிராடோஸ் மாடலுக்கான வினியோகம் இந்தியாவில் துவங்கியது. முதற்கட்டமாக 20 யூனிட்கள் டார்க் மோட்டார்ஸ் தலைமையகமான பூனேவில் வினியோகம் செய்யப்பட்டன. அம்சங்களை பொருத்தவரை டார்க் கிராடோஸ் இரு வேரியண்ட்களிலும் வேறுபடுகிறது.

    இதன் R வேரியண்டில் 9 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 105 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் ஸ்டாண்டர்டு வேரியண்ட் 7.5 கிலோவாட் மோட்டார் கொண்டுள்ளது. இது அதிகபட்சம் 28 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுகத்தும். இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சமாக 100 கிமீ வேகத்தில் செல்லும்.

    இரு வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டு இருக்கும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் முழு சார்ஜ் செய்தால் 120 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. தற்போது டார் கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் பூனே, மும்பை, டெல்லி, சென்னை மற்றும் ஐதராபாத் என ஐந்து நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது.

    • பஜாஜ் மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட்டணியில் எலெக்ட்ரிக் பைக் உருவாக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
    • இந்த மாடல் இந்தியாவிலேயே உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.

    பஜாஜ் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கை தாக்கலின் போது இந்த தகவலை ராகேஷ் ஷர்மா தெரிவித்தார். முதல் மாடலே ஹை-எண்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என ராகேஷ் ஷர்மா குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வகையில், புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 390 சீரிசுக்கு இணையான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.


    புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பற்றிய இதர விவரங்கள் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். எனினும், இந்த மாடலின் ஆயத்த பணிகள் தற்போது தான் துவங்கி இருக்கிறது. எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவை பொருத்தவரை சர்வதேச மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தாத நிலையை கடைபிடிக்கின்றன. எனினும், அனைத்து நிறுவனமும் திடமான எலெக்ட்ரிக் பைக்கை வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்ய திட்டம் கொண்டுள்ளன.

    இது தவிர பஜாஜ் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் ஹஸ்க்வர்னா பிராண்டிங் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் ஹஸ்க்வர்னா வெக்டார் மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த மாடல் இந்தியாவுக்காக உருவாக்கப்பட்டு, மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    • புதிய ஈவ்ட்ரிக் ரைஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கியது.
    • இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

    பூனேவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் ஈவ்ட்ரிக் மோட்டார்ஸ் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. ஈவ்ட்ரிக் ரைஸ் என அழைக்கப்படும் எலெக்ட்ரிக் பைக்கின் விலை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.


    புதிய ஈவ்ட்ரிக் ரைஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஈவ்ட்ரிக் ரைஸ் மாடலில் 2000 வாட் BLDC மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 70v/40ah லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

    ஈவ்ட்ரிக் ரைஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ரெட் மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    ×