search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எருமை கிடா வெட்டி பலி"

    • ஆத்தூர் சின்ன வண்டி காளியம்மனுக்கு, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து, பொங்கல் வைத்து வழிபட்டனர்.
    • சேவல், பன்றி மற்றும் எருமை கெடா வெட்டி, பலி கொடுத்து, அதன் உடலை புதைத்து, அம்மனுக்கு பூஜை செய்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் நந்தனார் தெரு கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சின்ன வண்டி காளியம்மன் கோவில். இந்த கோவில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

    அன்று இரவு அக்கரைப்பட்டியில் இருந்து அம்மனை அலங்கரித்து கோவிலுக்கு அழைத்து வந்தனர்.நேற்று முன்தினம் சின்ன வண்டி காளியம்மனுக்கு, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், மாலையில் சின்ன வண்டி காளியம்மனுக்கு கோவில் முன்பு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, அதன் அருகே சேவல், பன்றி மற்றும் எருமை கெடா வெட்டி, பலி கொடுத்து, அதன் உடலை புதைத்து, அம்மனுக்கு பூஜை செய்தனர்.

    பின்னர், மாலை அம்மன் ஊர்வலமாக பூஞ்சோலை சென்றது. இத்திருவிழாவில் ஆத்தூர், நந்தனார் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    ×