search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஆர்சி விவகாரம்"

    மக்களவையில் இன்று எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், என்ஆர்சி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். #NRCIssue #SCSTAct #LokSabhaProtests
    புதுடெல்லி:

    மக்களவை இன்று கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலிமைப்படுத்தும் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) வரைவு பட்டியல் வெளியான பிறகு, வங்கதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு தொந்தரவு கொடுக்கப்படுவதாகவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகதா ராய் வலியுறுத்தினார். இதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்.



    இப்படி பல்வேறு விவகாரங்களை முன்வைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. எனினும், கேள்வி நேரத்தை ஒத்திவைக்க மறுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவையை தொடர்ந்து நடத்தினார்.

    இதனால் அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அவர்களை அமைதியாகச் சென்று தங்கள் இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஜீரோ அவரில் அனைத்து கட்சிகளுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்பிறகு உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினர். #NRCIssue #SCSTAct #LokSabhaProtests
    அசாம் குடிமக்கள் பதிவேட்டில் 40 லட்சம் மக்கள் விடுபட்டது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் மாநிலங்களவை இரண்டாவது நாளாக இன்றும் முடங்கியது. #AssamNRC #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் விடுபட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த  விவகாரம் பாராளுமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்றும் எதிரொலித்தது.



    மாநிலங்களவை இன்று துவங்கியதும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ஆர்சி விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களுடன் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இணைந்துகொண்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவை அலுவல்கள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு என்ஆர்சி விவகாரம் குறித்து பேச வேண்டும் என தலைவர் டெரிக் ஓ பிரையன் வலியுறுத்தினார்.

    உறுப்பினர்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். அத்துடன், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிலளித்துவிட்டு, பின்னர் மாநிலங்களவையில் பேசுவார் என்றும் வெங்கையா நாயுடு சமாதானம் செய்தார்.

    ஆனால், மதியம் அவை கூடியபோதும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதனால் சிறிது நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகும் உறுப்பினர்களின் அமளி ஓயவில்லை. எனவே, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

    இதேபோல் நேற்றும் என்ஆர்சி விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை முடங்கியது. #AssamNRC #RajyaSabhaAdjourned
    என்ஆர்சி விவகாரத்தை முன்வைத்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. #AssamNRC #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் விடுபட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து நேற்று பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையில் நேற்று எந்த அலுவலும் நடைபெறவில்லை. மக்களவையில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது.



    இந்நிலையில், தேசிய குடிமக்கள் பதிவு விவகாரம் பாராளுமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்றும் எதிரொலித்தது. மாநிலங்களவை இன்று துவங்கியதும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ஆர்சி விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். அவை அலுவல்கள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு என்ஆர்சி விவகாரம் குறித்து பேச வேண்டும் என தலைவர் டெரிக் ஓ பிரையன் வலியுறுத்தினார்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

    மேலும், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிலளித்துவிட்டு, பின்னர் மாநிலங்களவையில் பேசுவார் என்றும் வெங்கையா நாயுடு  தெரிவித்தார். #AssamNRC #RajyaSabhaAdjourned
    ×