search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணெய் வித்து பயிர்"

    • 10 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
    • அதிகளவு நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் எண்ணெய்வித்து பயிர், 10 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் அதிகளவு நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் துறை சார்பில், தேசிய எண்ணெய் வித்துகள் இயக்கத்தின் வாயிலாக, 25.28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து வினியோகம், உயிர் உரங்கள் வினியோகம், ஜிப்சம் இடுதல், உயிரியல் காரணி வினியோகம்,பண்ணைக்கருவிகளான ரோட்டாவேட்டர் கொள்முதல் செய்ய, 34 ஆயிரம் ரூபாயும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறு, குறு, மலைஜாதி மற்றும் பெண் விவசாயிகளுக்கு ரூ/ 42 ஆயிரம் வழங்கப்படுகிறது.விசைத்தெளிப்பான்களுக்கு தலா, 3 ஆயிரம், தார்பாலின்கள் வாங்க, 2,500 ரூபாய் மற்றும் விதையிடும் கருவி வாயிலாக விதைப்பு செய்ய விதைப்பு கூலி ஹெக்டருக்கு, ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு, மடத்துக்குளம், குடிமங்கலம் மற்றும் உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×