search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸ்பீரியா"

    சோனி நிறுவனம் 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #Sony #CES2019



    2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா (சி.இ.எஸ்.) அடுத்த வாரம் துவங்குகிறது. இதையொட்டி சோனி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    அதன்படி சோனியின் புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 7 ஆம் தேதி மாலை 5.00 மணி (இந்திய நேரப்படி ஜனவரி 8 ஆம் தேதி மாலை 6.30 மணி) அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற இருக்கிறது. 



    வழக்கமாக சோனி நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாதம் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யும். 

    2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சோனி நிறுவனம் தனது எக்ஸ்பீரியா எக்ஸ்.ஏ.2, எக்ஸ்.ஏ.2 அல்ட்ரா மற்றும் எல்2 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. 


    புகைப்படம் நன்றி: OnLeaks

    அந்த வகையில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் சோனி நிறுவனம் தனது புதிய என்ட்ரி-லெவல் மற்றும் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்யலாம்.

    அப்படியாக சோனி நிறுவனம் எக்ஸ்.ஏ.3, எக்ஸ்.ஏ.3 அல்ட்ரா மற்றும் எக்ஸ்பீரியா எல்3 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருப்பதால், சோனியின் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பும் ஜனவரி 7 ஆம் தேதி எதிர்பார்க்கலாம்.
    ×