search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டியில்"

    • சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது.
    • 30 முதல் 40 கி.மீட்டர் தூரம் 10 நிமிடம் வரை பயணம் இருக்கும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது.

    வருகிற 19-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    அதன்படி இன்று கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி தொடங்கியது. 7-ந் தேதி நாளை முதல் 31-ந் தேதி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி, 8-ந் தேதி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடைபயணம், 11-ந் தேதி படகு போட்டி என பல்வேறு கோடை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    இதில் சிறப்பம்சமாக வருகிற 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஹெலிகாப்டர் சுற்றுலாவும், 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பலூன் திருவிழாவும் நடைபெற உள்ளது.

    கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஊட்டி நகரின் 200 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தொடங்கப்பட உள்ளது.

    இதை தொடர்ந்து படிப்படியாக மருத்துவ ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கப்படும். தனியார் நிறுவனம் மூலமாக ஊட்டி தீட்டுக்கல் மைதானத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெறும். ஒரு முறை ஹெலிகாப்டரில் 6 பேர் செல்லலாம்.

    அங்கிருந்து 30 முதல் 40 கி.மீட்டர் தூரம் 10 நிமிடம் வரை பயணம் இருக்கும்.

    விமான நிறுவன உத்தரவின்படி சுமார் ஆயிரம் அடி உயரம் வரை பறந்து, ஊட்டி நகரை கண்டு ரசிக்கலாம். இதற்கான கட்டணமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை இருக்கலாம்.

    ஆன்லைன் மூலமாக முன் அனுமதி பெறலாம். தீட்டுக்கல் மைதானத்துக்கு வந்தும் அனுமதி வாங்கலாம். ஊட்டி காலநிலையை பொறுத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பொதுப்பணி, வனம் உள்ளிட்ட துறைகளில் அனுமதி கேட்கப் பட்டுள்ளது.

    • அவ்வப்போது வழிதவறி கிராம பகுதிகளுக்குள் புகுந்தும் விடும் நிலை உள்ளது.
    • அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை

    கோத்தகிரி

    கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் பலா மரங்களில் ஏராளமான பிஞ்சுகள் காய்த்துள்ளன. இதை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளிப் பகுதியில் இருந்து மலைப்பகுதிக்கு வந்து, இங்குள்ள வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. அவ்வாறு வரும் யானைகள் அவ்வப்போது வழிதவறி கிராம பகுதிகளுக்குள் புகுந்தும் விடும் நிலை உள்ளது.

    இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை முள்ளூர் கிராம பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். மேலும் அங்கு வீடுகள் உள்ளதால், கிராமத்துக்குள் யானை நுழைந்து விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனா். மேலும் காட்டு யானை பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 2 நாள் விடுமுறையால் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் கடந்த நாட்களில் 16,000 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனா்.

    ஊட்டி,

    ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் முடிவடைந்திருந்தாலும், அப்போது தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக, ஊட்டிக்கு வரமுடியாத சுற்றுலா பயணிகள் தற்போது ஊட்டிக்கு தொடா்ந்து வருகின்றனா். இதில், ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் கடந்த நாட்களில் 16,000 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனா்.

    அதேபோல, ஊட்டி அரசினா் ரோஜா பூங்காவுக்கு 2 நாள்களில் சுமாா் 10,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். ஊட்டி படகு இல்லத்திற்கு சுமாா் 9000 பேரும், பைக்காரா படகு இல்லத்திற்கு 6000 பேரும் வந்துள்ளனா். இதுதவிர, வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள அவலாஞ்சி, பைக்காரா நீா்வீழ்ச்சி, பைன் பாரஸ்டு, சூட்டிங் மேடு மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கணிசமான அளவில் உள்ளது. தற்போது தசரா பண்டிகை காலமென்பதால், கா்நாடக, மகாராஷ்டிர மாநிலங்களில் அக்டோபா் முதல் வாரத்தில்தான் விடுமுறை அளிக்கப்படும். இதனால், அக்டோபா் மாதத்திலும் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கணிசமான அளவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    • 5 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

     ஊட்டி:

    ஊட்டி நகரில் அரசு தலைமை மருத்துவமனை, மத்திய பஸ் நிலையம் ஆகிய இடங்கள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 5 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    காலையில் இட்லி, சாம்பார், மதியம் தயிர் சாப்பாடு, எலுமிச்சை சாப்பாடு, கலவை சோறு ஆகியவை வழங்கப்படுகின்றன. ரூ.1 முதல் 5 ரூபாய் வரை‌யில் உணவுகள் கிடைப்பதால் ஏழை உழைப்பாளர்கள் மற்றும் நகரங்களில் வறிய நிலையில் உள்ள மக்கள் உணவருந்திச் செல்கின்றனர்.

    இந்த நிலையில் உதகை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் நகரசபை தலைவி வாணீஸ்வரி, ஆணையாளர் காந்தி ராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்ஆகொண்டனர். வருகை பதிவேடுகள், தினசரி குறிப்புகள் மற்றும் தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    எனது குப்பை எனது பொறுப்பு ஊட்டி நகராட்சி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நகரசபை தலைவி வாணீஸ்வரி, ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைததனர். தொடர்ந்து தூய்மை பணிகள் நடந்தன.

    • மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மழை கொட்டித்தீர்த்தது.
    • ரெயில்வே சுரங்கப்பாதையில் ஆட்டோ சிக்கியது

    ஊட்டி:

    கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கேரளாவை ஒட்டிய மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்கிறது.

    இந்தநிலையில் இன்று மதியம் ஊட்டியில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்தது. மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்டம் முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது.

    சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பஸ்நிலையம், மார்க்கெட் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து நின்றது. மழை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஊட்டிக்கு சுற்றுலா வந்த சுற்றுலாபயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    பஸ்நிலையத்தில் இருந்து படகு இல்லம் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் ஆட்டோ ஒன்று சிக்கியது. ஆட்டோவில் 5 பேர் இருந்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

    ×