search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளுந்து பயிரில் விதைப்பண்ணை"

    • விதைப்பண்ணை அமைக்க 975 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் அருணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயறு வகைப்பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க 975 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் உளுந்து பயிர் மட்டும் 638 ஹெக்டேர் ஆகும்.

    தற்போது நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் அதனைப் பயன்படுத்தி, தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயறுவகைப்பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க முன்வர வேண்டும். பயறுவகைப் பயிர்களில் விதைப்பண்ணை அமைப்பதினால் மண்ணிற்கு தேவையான தழைச்த்து காற்றிலிருந்து நிலைப்படுத்தப்படுகிறது. இதனால் மண்ணின் தரம் மேம்படுகிறது.

    மேலும் சந்தை விலையைவிட கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதாலும், ஊக்குவிப்பு மானியம் வழங்கப்படுவதாலும் லாபமும் பெற முடியும். எனவே விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரபீ பருவத்தில் உளுந்து பயிரில் விதைப்பண்ணை அமைப்பதன் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும்.
    • வேளாண்மை துறை அதிகாரிகளை அணுகி மானிய விலையில் சான்று பெற்ற விதைகளை வாங்கி விதை பண்ணை அமைக்கலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சித்தி ரைச்செல்வி வெயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்ட விவசாயிகள் ரபீ பருவத்தில் உளுந்து பயிரில் விதைப்பண்ணை அமைப்பதன் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும். உளுந்து பயிரில் வம்பன் 8, வம்பன் 10 ஆகிய ரகங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளை அணுகி மானிய விலையில் சான்று பெற்ற விதைகளை வாங்கி விதை பண்ணை அமைக்கலாம்.

    உளுந்தை ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 30 சென்டி மீட்டருக்கு 10 சென்டி மீட்டர் இடைவெளி விட்டு விதைத்து, சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற அளவில் பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். சாதாரணமாக பயறு வகைகளில் ஏக்கருக்கு 150 முதல் 200 கிலோ வரை மகசூல் கிடைக்கும். சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துதல், உயிர் உரம் மற்றும் பூஞ்சான கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்தல், சரியான பயிர் எண்ணிக்கையை பராமரித்தல், பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டிஏபி கரைசல் தெளித்தல், களைகள் மற்றும் கலவன்களை அகற்றுதல் போன்ற உரிய தொழில் நுட்பங்களை சரியான நேரத்தில் தவறாமல் கடைப்பிடிப்பதன் மூலம் ஏக்கருக்கு 350 முதல் 400 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

    இவ்வாறு உளுந்து பயிரில் விதை பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்து வேளாண்மை துறைக்கு வழங்கினால் உள்ளுர் சந்தை விலையுடன் உற்பத்தி மானியம் சேர்ந்து கூடுதல் லாபம் பெற இயலும்.

    விதை பண்ணை அமைக்க மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் உதவி விதை அலுவலரை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×