search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உருவ பொம்மைகள்"

    • முனியாண்டி கோவில் பரம்பரை ஜமீன்தார் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினால் குடும்பம் தலைத்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே சுக்காம்பட்டி மூங்கில்மலை அடிவாரத்தில் முனியாண்டி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று சிறப்பு வழிபாடு செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

    முனியாண்டி கோவில் பரம்பரை ஜமீன்தார் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் வெளியூரில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு களிமண்ணால் ஆன நாய், குதிரை, மாடு உள்ளிட்ட உருவ பொம்மைகளை காணிக்கையாக செலுத்தினர்.

    இது போல் காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினால் குடும்பம் தலைத்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். எனவே பாரம்பரியமாக இதனை பின்பற்றி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ×