search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உருளைக்கிழங்கு சிப்ஸ்"

    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
    உப்பு - 1/2 டீஸ்பூன்
    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - 150 கிராம்



    செய்முறை :

    உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.

    இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!

    காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு :

    உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.

    மிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான பொட்டேடோ ஸ்மைலி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ,
    பிரெட் க்ரம்ஸ் - 3½ டீஸ்பூன்,   
    கார்ன் ஃப்ளார் - 3 டீஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
    பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு,
    செடார் சீஸ் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

    ஸ்மைலி செய்ய...

    ஸ்பூன் - 1,
    ஸ்ட்ரா - 1,
    ரவுண்ட் கட்டர்- 1.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், கார்ன்ஃப்ளார், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீஸ் சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    பிசைந்த மாவில் பெரிய உருண்டையாக எடுத்து அதை நன்றாக உருட்டி கொள்ளவும்.

    பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணெய் தேய்த்து நடுவில் மாவை வைத்து மூடி சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி போல தடியாக தேய்க்க வேண்டும்.

    பின்னர் ரவுண்ட் கட்டர் கொண்டு வெட்டி ஸ்ட்ரா கொண்டு கண்கள் போல் இரண்டு ஓட்டை போட வேண்டும்.

    அடுத்து வாய்க்கு ஸ்பூனால் வரைய வேண்டும்.

    இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்க வேண்டும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து ஸ்மைலிகளை போட்டு பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப் உடன் பரிமாறவும்.

    சூப்பரான பொட்டேடோ ஸ்மைலி ரெடி.

    குறிப்பு: ஸ்மைலிகளை சிப்லாக் பேக் அல்லது பாக்ஸில் போட்டு மூடி ஃப்ரீசரில் வைத்து தேவைப்படும் பொழுது எடுத்து அதிக சூடான எண்ணெயில்  பொரித்தெடுத்து கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×