search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உருண்டை"

    காலையில் டிபனாகவும், மாலையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிட சத்தான உணவு இந்த அரிசி கடலைப்பருப்பு உருண்டை. இன்று இந்த உருண்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    துருவிய இஞ்சி, மாங்காய் - சிறிதளவு,
    ஊற வைத்த கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது - சிறிதளவு,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பச்சரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.

    இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது, பச்சரிசி ரவை சேர்த்துக் கைவிடாமல் கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

    பின்னர் இந்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

    இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உப்பு உருண்டை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த உப்பு உருண்டையில் காய்கறிகள் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்,
    கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப்,
    வெங்காயம் - 1,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    காய்ந்த மிளகாய் - 3,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு ஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பீன்சை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு. கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், பீன்ஸ் சேர்த்து, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து வதக்கி, ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

    இதில் தேங்காய் துருவல், அரிசி ரவை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஆறியதும் சின்ன உருண்டைகளாக பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சுவையான சத்தான வெஜிடபிள் உருண்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொட்டுக்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பொட்டுக்கடலையில் இனிப்பு உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொட்டுக்கடலை - ஒரு கப்,
    பாகு வெல்லம் - முக்கால் கப்,
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
    நெய் - சிறிதளவு.



    செய்முறை :  

    வெல்லத்தில் நீர் விட்டு கரைத்து, அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்கவும்.

    பாகுடன் பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து இளம் சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக பிடிக்கவும்.

    சூப்பரான இரும்பு சத்து நிறைந்த பொட்டுக்கடலை உருண்டை ரெடி.

    இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து அதிக நாட்கள் உபயோகிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×