search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர் நீதிமன்றம்"

    • ஒரே கோரிக்கையுடன் பல வழக்குகள் தாக்கல் செய்வதை தடுக்கும் வகையில் ஒரே அமர்வு அமைக்க கோரிக்கை
    • அதிமுக வழக்குகள் அனைத்தையும் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி மீண்டும் பட்டியலிட நீதிபதி உத்தரவு

    சென்னை:

    அதிமுக நிர்வாகம் மற்றும் பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கு சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும் என ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிசாமி மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஒரே கோரிக்கையுடன் பல வழக்குகள் தாக்கல் செய்வதை தடுக்கும் வகையில் ஒரே அமர்வு விசாரிக்கும் வகையில் இந்த சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும் என மனுதாரர்கள் கூறியிருந்தனர்.

    இந்நிலையில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு அமர்வு தொடர்பாக மனு அளிக்கப்பட்டிருப்பது தொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுப்பதுதான் வேலையா? தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என்று நினைக்கிறீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து அதிமுக வழக்குகள் அனைத்தையும் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி மீண்டும் தனக்கு முன்பாக பட்டியலிடுமாறு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

    • குற்றநோக்கம் இல்லாமல் பொதுவெளியில் 5க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவது சட்டவிரோதமல்ல
    • அம்பேத்கர் சட்டக் கல்லுரி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    சென்னை:

    ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எந்த குற்றநோக்கமும் இல்லாமல் பொதுவெளியில் 5க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவது சட்டவிரோதமல்ல என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது.

    இலங்கை அதிபருக்கு எதிராக கடந்த 2014ல் போராட்டத்தில் ஈடுபட்ட அம்பேத்கர் சட்டக் கல்லுரி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை ஓபிஎஸ் தாக்கல் செய்தநிலையில் விசாரணை தொடங்கியது.
    • அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகேட்ட ஓபிஎஸ் வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் சென்னை ஐகார்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடும்போது, 11ம் தேதி பொதுக்குழு கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருந்தது. அதனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து வாதாடிய எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால், அந்த அடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல்களை  தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்தார்.

    அதன்படி, ஜூலை 11-ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியது.

    வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை ஓபிஎஸ் தாக்கல் செய்தநிலையில் விசாரணை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    ×