search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபி கூட்டணி"

    உத்தரபிரதேசத்தில இருந்து மாயாவதி பிரதமர் ஆவதற்கு ஆதவு அளிப்போம் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். #AkileshYadav #Mayawati
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் கூட்டாக வெளியிட்டனர்.

    இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் தலா 38 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

    தேர்தலுக்கு பிறகு மாயாவதி பிரதமராக ஆதரவு கொடுப்பீர்களா? என்று அகிலேஷ் யாதவிடம் கேட்டபோது கூறியதாவது:-

    உத்தரபிரதேசம் பல பிரதமர்களை நாட்டிற்கு அளித்துள்ளது. எனவே உத்தரபிரதேசத்தில் இருந்து மீண்டும் ஒருவர் (மாயாவதி) பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளிப்போம்.

    தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். இதேபோல ராஷ்டிரிய லோக் தளத்துக்கான தொகுதி பங்கீடு குறித்தும் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AkileshYadav #Mayawati
    பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #Congress #PChidambaram #UPalliance
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து உள்ளன.

    மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடுகின்றன.

    இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை. ஆனாலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்காக அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தனர்.

    இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் இடையே ஏற்பட்டுள்ள இந்த கூட்டணியானது இறுதி முடிவு இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த கூட்டணி தொடர்பாக மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம். உத்தரபிரதேசத்தில் மிகப்பெரிய கூட்டணி அமைவது உறுதி.

    தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சி சொந்த பலத்துடன் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார். #Congress #PChidambaram #UPalliance
    ×