search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணர்ச்சிமிகு பேச்சு"

    கர்நாடக சட்டசபையில் இன்று உணவு இடைவேளைக்கு பிறகு அவை கூடியபோது முதல் மந்திரி எடியூரப்பா உணர்ச்சிமிகு உரையை ஆற்றினார். #KarnatakaElection #Assembly #Yeddyurappa
    பெங்களூரு:

    முதல் மந்திரி எடியூரப்பா இன்று சட்டசபையில் உணர்ச்சிமிகு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த  ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் என்னை வேட்பாளராக அறிவித்தனர். கர்நாடக மக்களின் பிரச்னைகலை தீர்த்து வைக்க பாடுபடுமாறு எனக்கு கட்டளையிட்டனர்.

    கர்நாடகாவில் தனி பெரும்பான்மை கட்சியாக பாஜகவை தேர்வு செய்ததற்கு நன்றி. பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் மக்கள் எங்களுக்கு கூடுதல் எம்.எல்.ஏ.க்களை அளித்துள்ளனர்.

    காங்கிரசும் மஜதவும் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதுதான் மக்களின் தீர்ப்பு. ஆனால், காங்கிரசும் மஜதவும் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்து வருகின்றன.

    கர்நாடக தலைநகர் பெங்களூரில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மேலும், மாநிலத்தில் விவசாயிகள் பிரச்னை,  குடிநீர் பிரச்னை என பல்வேறு பிரச்னைகள் அணிவகுத்து நிற்கின்றன

    மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும் மஜதவும் செயல்பட்டு வருகின்றன. மாநில பிரச்னைகளில் அக்கறை காட்டாதவர்கள் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.

    நான் பதவியேற்றதும் முதல் கையெழுத்தே விஅவ்சாய கடன் தள்ளுபடிதான். ஏரி, குளங்களை பராமரித்து விவசாயிகளுக்கு புத்துயிர் ஊட்ட திட்டமிட்டேன். உயிர் மூச்சு உள்ளவரை விவசாயிகளுக்காக பாடுபடுவேன்.

    கர்நாடகாவை முன் மாதிரி மாநிலமாக மாற்ற பிரதமர் மோடி பல திட்டங்களை என்னிடம் கலந்துரையாடினார். கனிம வளத்தை அதிகமாக கொண்டது கர்நாடகா. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தால் நன்மை தரும் பல திட்டங்கள் கிடைக்கும் என தெரிவித்தார். #KarnatakaElection #Assembly #Yeddyurappa
    ×