search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடனடி தீர்வு"

    • மக்கள் நீதிமன்றத்தில் நில உரிமையாளர் வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது
    • ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி லதா தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் நிலங்களை கையகப்படுத்தியது.இதையடுத்து நிலங்களை இழந்த விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமலும் வீடுகள் கட்ட முடியாமல் சில வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களுக்கு அந்தந்த நில உரிமையாளரிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென்று சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க, ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் நேற்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் 110 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் அனல் மின் திட்ட தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வேலுமணி கூறினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார். இந்த மக்கள் நீதிமன்றத்தினை ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முத்து கிருஷ்ணன், ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வேலுமணி அரசு வழக்கறிஞர்கள் .மோகன் ராஜ் மற்றும் செந்தில்குமார், மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் முன்னின்று நடத்தினர்.




    • குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு வழங்கிய 2 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    • தையல் எந்திரங்களை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுசெய்த உடனடி தீர்வாக 2 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயராணி, மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • ஜமாபந்தியில் 345 பெறப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டங்களில் ஜமாபந்தி துவங்கியது. அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது,

    இந்த மாவட்டத்தில் பொட்டவெளி, இலுப்பையூர், ராயம்புரம், சென்னிவனம், ஓட்டக்கோவில், அமினாபாத், கோவிந்தபுரம், அரியலூர் வடக்கு, அரியலூர் தெற்கு, வாலாஜாநகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரிய நாகலூர், தேளூர், காவனூர், விளாங்குடி ஆகிய 18 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.

    இந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட 345 மனுக்களில் 25 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது,

    இந்நிகழ்ச்சியில் அரியலூர் கலெக்டர் அலுவலக மேலாளர் முத்துலட்சுமி, தாசில்தார் குமரய்யா, தலைமையிடத்து துணை தாசில்தார் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சாமிதுரை, சர்வே பிரிவு அன்புச்செல்வி, கிராம நிர்வாக அதிகாரிகள் உமா சங்கர், நந்தகுமார், முருகேசன், சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×