search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்"

    • வாட்டர் பாட்டிலை எடுத்து திடீரென உடலில் மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
    • இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்களை அவரிடம் வழங்கினர்.

    அப்போது ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊஞ்சகாடு பகுதியை சேர்ந்த ராசு (40) என்பவர் திடீரென கலெக்டர் அலுவலகத்தில் முன்பு வந்து தான் மறைத்து வைத்திருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து திடீரென உடலில் மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இது பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் ஓடி வந்து அவரிடமிருந்து வாட்டர் பாட்டிலை பறித்தனர்.

    பின்னர் சிறிது நேரத்தில் அவரது சட்டை நீலம் நிறத்தில் மாறியது. இது குறித்து போலீசார் அவரிடம் கேட்டபோது நான் ஊற்றியதும் மண்எண்ணெய் இல்லை, தண்ணீரில் நீல கலரை கலந்து உடலில் ஊற்றினேன் என்றார்.

    இது குறித்து போலீசார் அவரிடம் விசாரித்த போது, தான் அந்தியூர் ஊஞ்சக்காடு பகுதியில் உள்ள பால் சொசைட்டியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தேன் என்றும், கடந்த 4 வருடங்கள் முன்பு எண்ணை பணியில் இருந்து நீக்கி விட்டார்கள் என்றும், மீண்டும் வேலைக்கு எவ்வளவோ முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை.

    இது சம்பந்தமாக ஏற்கனவே மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் இவ்வாறு செய்தேன் என்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    • 8 அணை நீர் தேக்கமே தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்திடம் உள்ளது.
    • நீதிமன்ற தீர்ப்பின்படி பவானிசாகர் அணையின் மீன்பிடிப்பு உரிமையினை எங்கள் இரு மீனவர் கூட்டுறவு சங்க த்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பவானிசாகர் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறியிரு ப்பதாவது:-

    நாங்கள் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் மீனவர்கள். நாங்கள் எப்(பிஎல்) 10 பவானிசாகர் மீனவர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 322 உறுப்பினர்களும், பி.எப். 4 சிறுமுகை மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தில் 527 உறுப்பினர்கள் உள்ளோம்.

    மேலும் இணை உறுப்பின ர்களாக 586 உறுப்பினர்களும் என மொத்தம் 1435 நபர்கள் இரு சங்கங்களிலும் உறுப்பி னராக உள்ளோம். 622 சங்க உறுப்பினர்கள் அரசால் நியமனம் செய்யப்பட்ட பங்கு மீனவர்கள்.

    நேர்காணம் 622 பங்கு மீனவர்கள் தான் பவானி சாகர் அணையில் மீன் பிடித்து வருகிறோம். மேலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீன்பிடிப்பு சம்பந்தப்பட்ட தொழில்க ளில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கள் மீன் பிடிப்புக்கு பரிசல், வலை மற்றும் இதர பொருட்களையும் எங்கள் சொந்த செலவில் செய்து வருகிறோம்.

    எங்கள் மீன் பிடிப்பு தொழிலுக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமோ, குத்த கைதாரர்களோ எந்த உதவி யும் செய்வதில்லை.

    இதனால்தான் எங்களின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறி கடந்த வருடம் நவம்பர் மாதம் 21-ந் தேதி மற்றும் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி ஆகிய நாட்களில் 7 அம்ச கோரிக்கை வலி யுறுத்தி கடிதம் அளித்தோம்.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் எவ்வித கோரி க்கைகளையும் நிறைவேற்ற முடியாது என்று கூறி விட்டார்கள்.

    எனவே பவானி சாகர் அணையின் மீன்பிடிப்பு குத்தகை உரிமையினை இரு கூட்டுறவு சங்கங்களுக்கும் வழங்கும் பட்சத்தில் பங்கு மீனவர்களின் 7 அம்ச கோரிக்கைகளை இரு கூட்டுறவு சங்கமும் வழங்கும் என்று கூறி யிருந்தோம்.

    அதற்கும் எந்தவித பதி லும் சொல்லவில்லை. இதனை அடுத்து நீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்து அரசாணை எண் 332-ன் படி சில நிபந்தனைகளுடன் கூட்டுறவு சங்கத்திற்கே மீன்பிடிப்பு உரிமையினை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

    தமிழ்நாட்டில் 56 அணை நீர் தேக்க மீன்பிடிப்பு, மீன் துறை வசம் உள்ளது. அதில் பெரும்பாலான நீர் தேக்க ங்கள் மீனவர் கூட்டுறவு சங்கமே நடத்துகிறது. உதாரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை மிகப்பெரிய நீர் சேர்க்கும் ஆகும். அதையே மீனவர் கூட்டுறவு சங்கமே நடத்து கிறது. இவ்வாறு இருக்க மொத்தம் 8 அணை நீர் தேக்கமே தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்திடம் உள்ளது.

    இந்நிலையில் தனியா ருக்கு மீன்பிடிக்க குத்தகை க்கு விடப்படுவதால் பங்கு மீன வர்களான நாங்கள் பெரிதும் பாதிக்கப்படு கிறோம்.

    எனவே பவானி சாகர் அணையின் மீன்பிடி ப்பினை நீதிமன்ற தீர்ப்பு ப்படி எங்கள் இரு மீனவர் கூட்டுறவு சங்கத்துடன் வழங்க வேண்டும். அல்லது பழைய முறைப்படி மீன் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

    எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி பவானிசாகர் அணையின் மீன்பிடிப்பு உரிமையினை எங்கள் இரு மீனவர் கூட்டுறவு சங்க த்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஓராண்டு க்கு செலுத்த வேண்டிய மீன் பிடிப்பு குத்தகை தொகை, 5 ஆண்டுகள் செலுத்த வேண்டிய ராயல்டி தொகை, மீனவர் நல வாரியத்துக்கு செலுத்த வேண்டிய பங்கு தொகை, முன்வைப்பு தொகை ஆகியவற்றை எங்கள் இரு சங்கத்திடமும் பெற்றுக் கொண்டும் இதுவரை இடைக்காலமாக மீன் துறையோ அல்லது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமோ மீன்பிடிப்பினை நடத்தி எங்கள் பங்கு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • திடீரென அவர்கள் தாங்கள் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர்.
    • இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கொங்கர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் (42). இவர் தனது மனைவி பாப்பா என்பவருடன் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுத்த வந்தார்.

    பின்னர் திடீரென அவர்கள் தாங்கள் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச் சென்று அவர்களை காப்பாற்றினர்.

    பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுந்தரம் கூறியதாவது:-

    கொங்கர் பாளையம் ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் எனக்கு 82 சென்ட் நிலம் உள்ளது. இங்கு விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 2008 -ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் எனது மனைவி வாணிபுத்தூரை சேர்ந்த ஒருவரிடம் 60 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார்.

    அதற்கு என் மனைவி எனது பெயரில் உள்ள நில பத்திரத்தை அந்த நபரிடம் கொடுத்து கைரேகை வைத்து கடன் பெற்றார். இந்த 60 ஆயிரம் கடனுக்காக நாங்கள் இதுவரை 2 லட்சத்து 94 ஆயிரம் வட்டி கொடுத்து விட்டோம். ஆனால் அவர் எங்களிடம் வாங்கிய பாத்திரத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.

    தற்போது திடீரென அந்த நபர் எங்கள் நிலத்தை வேறு ஒருவர் பெயரில் கிரையம் செய்து விற்று விட்டதாக கூறுகிறார். இது குறித்து அந்த நபரிடம் கேட்டபோது அவர் எங்களை திட்டி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.

    அந்த இடத்தை வாங்கியவரும் எங்களை மிரட்ட தொடங்கினார். எங்களிடம் மோதினால் ஊரை விட்டு பஞ்சாயத்து மூலமாக தீர்மானம் போட்டு ஒதுக்கி விடுவோம் என்று மிரட்டுகின்றனர்.

    இன்னும் ஒரு வாரத்தில் இடத்தை காலி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர். எனவே எங்கள் நிலத்தை மீண்டும் எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இதுதொடர்பான மனுவையும் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார்.

    தீ குளிக்க முயன்றதை அடுத்து சுந்தரம் மற்றும் அவரது மனைவியை சூரம்பட்டி போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×