search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் திருமணம்"

    புதுவையில் 15 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கோவிந்த சாலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கூலித் தொழிலாளி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் திருவக்கரையில் வைத்து திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவரது வயது 15 என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து டாக்டர்கள் குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த குழுவினர் அந்த இளம்பெண் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த பெண்ணுக்கு 15 வயது தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவிடம் புகார் அளித்தனர்.

    அதை விசாரித்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அந்த புகாரை பெரியகடை போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்குமார் மற்றும் போலீசார் விசாணை நடத்தி இளம்பெண்ணை திருமணம் செய்த மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில், மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் காதலனுடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ராதாபுரத்தை சேர்ந்தவர் குலாப்ஜான். இவரது மகன் முகமது (வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த முகமதுவின் மகள் சாயின் (20) என்பவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் கடந்த 2015-ம் ஆண்டு காதலர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். இதையடுத்து முகமது குவைத்திற்கு வேலைக்கு சென்றார்.

    2 ஆண்டுகள் அங்கு வேலை செய்துவிட்டு கடந்த 2017-ம் ஆண்டு திருவண்ணாமலைக்கு திரும்பினார். இதையடுத்து மீண்டும் இவர்கள் இருவரும் பழகி உள்ளனர். அப்போது முகமது ஆசை வார்த்தை கூறி சாயினிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் பல்வேறு காரணங்களை முகமது கூறி சாயினை திருமணம் செய்து கொள்ள மறுத்து உள்ளார். இதையடுத்து சாயின், தன்னை முகமது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூருவில் முகமதுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக சாயினுக்கு தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து சாயின், வக்கீல் ராஜசேகர் மூலம் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனு குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி மற்றும் சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில் இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    இதையடுத்து இருதரப்பையும் சமரசம் செய்து முகமதுவுக்கும், சாயினிற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் ஜமாத் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் மணமக்களை நீதிபதிகள் வாழ்த்தினர்.

    சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் இதுபோன்று திருமணம் செய்து வைப்பது இதுவே முதல்முறை என்று நீதிமன்ற வட்டாரத்தில் கூறப்பட்டது.
    ×