search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கையில் அவசரநிலை பிரகடனம்"

    இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை சட்டத்தை பிரகடனப்படுத்த அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #SriLankablasts #SriLanka #Emergency #EmergencyinSriLanka
    கொழும்பு:

    இலங்கையில் நேற்று ஈஸ்டர் பண்டிகையின்போது கொழும்பு நகரில் நிகழ்ந்த 8 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 290 பேர் பலியானதை தொடர்ந்து நேற்று பிற்பகல் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது. 

    இந்நிலையில், இன்றிரவு 8 மணியில் இருந்து நாளை (23-ம் தேதி) அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    இதற்கிடையில், இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை சட்டத்தை பிரகடனப்படுத்த அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பயங்கரவாதத்தை தடுக்கும் நோக்கத்தில் பிரகடனப்படுத்தவுள்ள இந்த அவசரநிலை சட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அரசு அறிவிக்கை இன்று நள்ளிரவில் வெளியாகும் என இலங்கை அதிபர் மாளிகை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. #SriLankablasts #SriLanka #Emergency #EmergencyinSriLanka 
    ×