search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை பெண் மந்திரி"

    விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை குழந்தைகள் நலத்துறை ராஜாங்க மந்திரி விஜயகலா ராஜினாமா செய்தார். #VijayakalaMaheswaran
    கொழும்பு:

    இலங்கையில் குழந்தைகள் நலத்துறை ராஜாங்க மந்திரி ஆக இருந்தவர் விஜயகலா மகேஸ்வரன். ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த இவர் யாழ்பாணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது வடக்கு பகுதியில் 6 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டார். 59 வயது பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் கொள்ளையும் நடந்துள்ளது. அரிவாள் வெட்டு சம்பவங்கள், போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

    ஆனால் நடவடிக்கை இல்லை. அவற்றை பார்க்கும் போது விடுதலை புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் விடுதலைப் புலிகள் காலத்தில் இல்லை. மக்கள் பாதுகாப்புடனும், அமைதியாகவும் வாழ மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக வேண்டும்’ என்றார்.

    அவரது இந்த பேச்சு இலங்கையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்திலும் சிங்களர்கள் அதிகம் வாழும் தெற்கு பகுதியிலும் விஜயகலா மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே அவர் மந்திரி பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே மற்றும் அவரது ஐக்கிய தேசிய கட்சியும் வலியுறுத்தியுள்ளது.

    அதை ஏற்று நேற்று அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதுகுறித்து பேட்டி அளித்த அவர், ‘‘மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கிற போது நாம் எதையும் செய்யாது வேடிக்கை பார்க்க முடியாது. இதனால் தான் மக்களின் துன்பங்களை எடுத்துக் கூற முயன்றேன்.

    இதனால் தென் பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் எனது மந்திரி பதவியை மக்களுக்காக மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்து இருக்கிறேன்’’ என்றார். இவரது கணவர் டி.மகேஸ்வரனும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர். எம்.பி. மற்றும் மந்திரி ஆக இருந்த அவர் 2008-ம் ஆண்டு கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார். #VijayakalaMaheswaran
    விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன் மீது கடும் நடவடிக்க எடுக்க அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன். தமிழரான இவர் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர். குழந்தைகள் நலத்துறையை கவனித்து வரும் விஜயகலா யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், ‘‘இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகம் நடைபெற்ற போது சமூகத்தில் எந்த குற்ற சம்பவமும் நடைபெறவில்லை. இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை’’ என்றார்.


    இந்த பேச்சு இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளியும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. மந்திரி விஜயகலாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    இதுகுறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா கருத்து கூறியுள்ளார். அதில், ‘‘ராஜாங்க மந்திரி பதவியில் உள்ள ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட முடியாது என்றார். மேலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். #SrilankanPresident #MaithripalaSirisena #SrilankanMinister
    ×