search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறந்தது"

    • சமயபுரம் அருகே எம்.ஆர். பாளையத்தில் வனத்துறை சார்பில் யானைகள் மறுவாழ்வு முகாமில் ஜமீலா என்ற 62 வயது மதிக்கத்தக்க பெண் யானை பராமரிக்கப்பட்டு வந்தது
    • ஒருமாத காலமாக வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் பாதிக்ப்பட்ட ஜமீலாவுக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்கவில்லை.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எம்.ஆர். பாளையத்தில் வனத்துறை சார்பில் யானைகள் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. கோவில்களில் வளர்க்கப்பட்டு நோய்வாய்ப்படும் யானைகள், குணாதிசய மாற்றம் ஏற்படும் யானைகள் இங்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளித்து பராமரிக்கப்படுகிறது.

    அந்த வகையில் ஜமீலா என்ற 62 வயது மதிக்கத்தக்க பெண் யானை 2 ஆண்களாக இந்த முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானையை தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உரிமை சான்று மற்றும் வழித்தட சான்று இல்லாமல் பணம் சம்பாதிக்கு நோக்கில் மட்டும் அதன் உரியைாளர் பயன்படுத்தி வந்துள்ளார்.

    இந்த யானை பல நாள் நோய் வாய்ப்பட்டு இருந்த நிலையிலும், அதற்குரிய சிகிச்சை அளிக்காமல் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இருந்தது மாவட்ட வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குழுவினால் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து யானை ஜமீலா மீட்கப்பட்டு திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் வைத்து பராமரித்து வன கால்நடை மருத்துர்களால் 2 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒருமாத காலமாக வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட ஜமீலாவுக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்கவில்லை.

    நேற்று பகல் 12.30 மணிக்கு யானை பாகனின் கட்டளைக்கு இணங்க மறுத்த யானை மிகவும் சோர்வடைந்த நிலையில் நிற்ககூட முடியாமல் நிலைகுலைந்து அமர்ந்தது. உடனடியாக திருச்சி கால்நடை மருத்துவமனை உதவி இயக்குநர் தலைமையிலான மருத்துவக்குழு விரைந்து, வந்து யானையை பரிசோதித்தனர். அதில் யானை உயிரிழந்தது பகல் 2.30 மணிக்கு உறுதிப்படுத்தபட்டது.

    தொடர்ந்து வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குழு முன்னிலையில் வன கால்நடை மருத்துவக் குழுவினர்களால் இன்று (18-ந்தேதி) காலை ஜமீலா யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் எம்.ஆர்.பாளையம் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானைகளின் எண்ணிக்கை 8 லிருந்து 7 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×