search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு குழாய்"

    • அமைச்சர் நேருவிடம், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • கூட்டுக் குடிநீர் திட்டம் 2006-ம் ஆண்டு அமைக்கப்படுகிறது

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து வழங்கியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால், 79 கடலோர குடியிருப்புக்கான 17 பேரூராட்சிகள் மற்றும் 19 வழியோர குடியி ருப்புகளுக்கான சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு விளாத்துறையில் தலைமையிடமாக கொண்டு நாள் ஒன்றுக்கு 10.7 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, துடிச்சிகுளம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு மூன்று லட்சத்து மூப்பத்தி மூன்றாயிரத்து ஒன்று மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு திட்டம் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்படி திட்டத்தில் ராட்சத காங்கிரிட் குழாய்கள் 400 மி.மீ முதல் 600 மி.மீ. விட்டம் வரையில், துடிச்சிகுளம் சுத்திகரிப்பு நிலையம் முதல் விளாத்துறை, காப்பிக்காடு, சடையன்குழி, கிள்ளியூர், தொலையாவட்டம், மாங்கரை, வட்டகோட்டை, பாலூர், கருங்கல், கருமாவிளை, மானான்விளை, கருக்குப் பனை, மத்திகோடு, திக்கணங்கோடு, பாளை யம், மேக்கோடு, திங்கள் நகர், மாங்குழி, மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம் வழியாக கோவளம் வரை 60 கிலோ மீட்டர் தூரம் சாலையின் நடுவில் ராட்சத காங்கிரிட் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    இதனால் இந்த வழி சாலைகள் கடந்த 2016-ம் ஆண்டு வரை பழுதடைந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஒட்டிகள், வழியோர கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2016 -ம் ஆண்டு சாலை சீரமைக்கப்பட்டது.

    ஆனால் சாலை சீரமைக்கப்பட்ட சில நாட்களில் இருந்து இன்று வரை புதுக்கடை - பரசேரி சாலையில் பல்வேறு இடங்களில் நீரின் அழுத்தம் தாங்காமல் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத காங்கிரீட் குழாய் களில் சில அடிக்கு ஒன்று வீதம் நீர் கசிவுகள் ஏற்படுகிறது. இதனால் இந்த நீர் கசிவுகளை சரி செய்வதற்காக சாலை கள் உடைக்கப்படுகிறது.

    இதன் காரணமாக தற்போது விளாத்துறை முதல் திங்கள் நகர் வரை சுமார் 250 -க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத காங்கிரிட் குழாய்களில் ஏற்படும் நீர் கசிவுகளை சரி செய்வதற்காக சாலை உடைக்கப்ப ட்டுள்ளது. இதனால் புதுக்கடை - தோட்டியோடு சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. வாகனங்களில் வருவோருக்கு எங்கெங்கு பள்ளங்கள் உள்ளது என்று தெரியாமல் இருக்கிறது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன மற்றும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

    எனவே விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க போர்கால அடிப்படையில் ராட்சத காங்கிரீட் குழாய்களுக்கு பதிலாக இரும்பு பைப்புகளாக மாற்றி சாலையின் ஓரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×