search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும்"

    • விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவு
    • பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பட்டாசு கடை வைப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வழி முறைகள் வெளியிடப்பட்டது.

    அதன் விவரம் வருமாறு:-

    பட்டாசு கடைகளில் அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே இருப்பு வைத்து வியாபாரம் செய்ய வேண்டும். தனி நுழைவு வாயில் மற்றும் அவசர வழியானது வெளிப்புறம் திறக்கும் வகையில் அமைக்கப்பெற்றிருக்க வேண்டும்.

    பட்டாசு வகைகள் வைக்கப்பட்டுள்ள அறை மக்கள் நடமாட்டம் இல்லாமலும், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் இல்லாத இடமாகவும் அமையபெறுதல் வேண்டும். உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

    பராமரிப்பு பணிகள் அல்லது பட்டாசு இருப்பு அளவினை உயர்த்துவது தொடர்பாக அல்லது வேறு எந்த பணிகள் செய்தாலும் உரிமம் வழங்கும் அதிகாரிக்கு எழுத்துபூர்வமாக தெரிவித்து உரிய அனுமதி பெற்ற பின்பே செய்யப்பட வேண்டும். வெடிவிபத்தோ அல்லது தீ விபத்தோ அல்லது பட்டாசு கடையில் இருப்பின் அளவு குறைந்தாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும். உரிமம் வழங்கும் அலுவலருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

    பட்டாசு வகைகள் அரசால் அனுமதிக்கப்பட்டதாகவும்

    உரிய அனுமதி பெற்ற முகவரிடம் மட்டுமே வாங்கப்பட வேண்டும். குளோரேட் கொண்டு தயாரிக்கப்படும் வண்ண மத்தாப்பூ, சங்குசக்கரம், பூத்தொட்டி ஆகியவற்றிலிருந்து மற்ற பட்டாசு வகைகள் தனியாக வைத்து விற்பனை செய்யப்பட வேண்டும்.

    சீனாவில் தயாரிக்கப்படும் பட்டாசு வகைகளை எக்காரணத்திற்கொண்டும் இருப்பு வைப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது.

    வேறு வகையான வெடி பொருட்களோ துப்பாக்கி மருந்துகளோ வெடி பொருள் கலவைகளோ வைத்திருக்க கூடாது.

    பட்டாசு இருப்பு வைத்திருக்கும் பகுதி 9 சதுர மீட்டருக்கு குறையாமலும் 25 சதுர மீட்டருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    மின் சாதனங்களும், கம்பிகளும் பாதுகாப்பான முறையில் மூடப்பட்டிருக்க வேண்டும். மின் சாதனங்கள் கட்டிடத்தின் வெளிபுறத்தில் அமைக்கப்பட வேண்டும்.

    எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் இருக்கும் ஸ்தலத்திற்கும் இடையே 15 மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும்.

    அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் திரி கொண்ட எண்ணெய் விளக்குகள், பெட்டர்மாஸ் விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

    உரிமதாரர்கள் மற்றும் பணியாளர்கள் அணைவரும் தீத்தடுப்பு சாதனங்களை (தீயணைப்பான்கள்) அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான வழிமுறையை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

    மேலும் தீத்தடுப்பு சாதனங்கனை உரிய தேதியில் புதுப்பித்தும், எந்நேரத்திலும் பயன்படுத்தும் வகையிலும் மற்றும் மணல் வாளிகள் தண்ணீர் வாளிகள் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×