search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டைக் கொலை"

    • ராம்குமாரை முருகேசன் உள்ளிட்ட 2 பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.
    • மாரியம்மாளுக்கும், அவரது அண்ணன் முருகேசனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அண்ணா நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் மாயா என்ற ராம்குமார் (வயது 45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள் (42).

    இவரது அண்ணன் முருகேசன் (49) என்பவர் அதே தெருவில் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

    கணவன்-மனைவி கொலை

    நேற்று இரவு ராம்குமார் தனது வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன் உள்ளிட்ட 2 பேர் சேர்ந்து ராம்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.

    பின்னர் முருகேசன் உள்ளிட்ட 2 பேரும், ராம்குமார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த ராம்குமாரின் மனைவியும், தனது சகோதரியுமான மாரியம்மாளையும் சரமாரியாக வெட்டி கொன்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தந்தை-மகனுக்கு வலைவீச்சு

    அதில் மாரியம்மாளுக்கும், அவரது அண்ணன் முருகேசனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அந்த சொத்து மாரியம்மாள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், அவரது மகன் மகேஷ் (20) ஆகியோர் ராம்குமார் மற்றும் மாரியம்மாளை கொலை செய்தது தெரியவந்தது.

    இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தர வின்பேரில் டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பார்வை யில் இன்ஸ்பெக்டர் ராஜா ராமன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.

    தலைமறைவான தந்தை-மகன் எங்கு உள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர். 

    • திருச்சி-திண்டுக்கல் சாலையில் வையம்பட்டி அருகே இந்த கொடூர இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றது
    • இந்த வழக்கில் மொத் தம் 50 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர்.

    திருச்சி:

    திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் துரைராஜ். இவரது டிரைவர் சக்திவேல். இவர்கள் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு காருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். திருச்சி-திண்டுக்கல் சாலையில் வையம்பட்டி அருகே இந்த கொடூர இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றது.

    இந்த வழக்கு தொடர்பாக முதலில் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் துப்பு எதுவும் துலங்கவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது .

    புலன் விசாரணையின் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சாமியார் கண்ணன், அவரது கள்ளக்காதலி யமுனா, யமுனாவின் தாயார் சீதாலட்சுமி ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    இந்த நிலையில் தொழில் அதிபர் துரைராஜ் யமுனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதால் ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் நோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீதாலட்சுமி மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து மற்ற இருவர் மீதும் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. அவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கில் மொத்தம் 50 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்கள். அவர்களில் டி.எஸ்.பி. மலைச்சாமி, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அரசு டாக்டர் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள். இந்த வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் வக்கீல்கள் வாதம் நடைபெற்றது.

    இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்களின் வாதம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (25-ந்தேதி) வழங்கப்படும் என நீதிபதி ஜெயக்குமார் அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் திருச்சி மத்திய சிறை மற்றும் திருச்சி மகளிர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சாமியார் கண்ணன் மற்றும் யமுனா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அப்போது, கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கொலையாளிகளான சாமியார் கண்ணன், யமுனா ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    மேலும் தடயங்களை மறைத்த குற்றத்திற்காக சாமியார் கண்ணனுக்கு மட்டும் 5 ஆண்டுகள் சிறை, கூட்டு சதியில் ஈடுபட்டதற்காக இருவருக்கும் தலா 7 ஆண்டுகளும், கார் எரிக்கப்பட்டதற்கு தலா 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பு வழங்கினார்.

    ×