search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை எழில்"

    • ஊட்டியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 9 கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • சுற்றுலா வளா்ச்சிக்காக செப்டம்பா் 27-ந் தேதி உலக சுற்றுலா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

     ஊட்டி 

    ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற உலக சுற்றுலா தின விழாவை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். இதையொட்டி ஊட்டியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 9 கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.

    தொடர்ந்து கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுற்றுலா வளா்ச்சிக்காக செப்டம்பா் 27-ந் தேதி உலக சுற்றுலா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு உலக சுற்றுலா தினம் 'சுற்றுலா மறுசிந்தனை' என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. அத்தொழிலை மறுசீராய்வு செய்து மேம்படுத்த இந்த ஆண்டு சுற்றுலா மறுசிந்தனை என்ற கருப்பொருளை உலக சுற்றுலா நிறுவனம் உலக நாடுகளுக்கு அறிவித்துள்ளது.

    நீலகிரி மாவட்டம், ஊட்டி மலைவாசஸ்தலம் அனைத்திற்கும் அரசியாக விளங்குகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆண்டுதோறும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனா். இதன் இயற்கை எழில் பாதிக்காத வகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்த்து அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்து, சுற்றுச்சூழலை, இயற்கை எழிலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடா்ந்து, கலை பண்பாட்டுத் துறை மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், ஊட்டி கோட்டாட்சியா் துரைசாமி, நகராட்சி ஆணையா் காந்திராஜா, கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநா் பாலகிருஷ்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

    ×