search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இம்ரான் தாகீர்"

    ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த இரண்டு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்தினர். #IPL2019
    ஐ.பி.எல். போட்டியில் நேற்று தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் 4 விக்கெட் வீழ்த்தினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடும் ரபடா 4 விக்கெட்டும், கிறிஸ் மொரிஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் 39 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 156 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 116 ரன்னில் சுருண்டது. ஐதராபாத் அணியின் கடைசி 8 விக்கெட்டுகள் 15 ரன்னில் சுருண்டதால் பாதிப்பு ஏற்பட்டது. #IPL2019
    கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பான பந்து வீச்சுக்கு கேப்டன் டோனியின் அறிவுரையே காரணம் என இம்ராம் தாகீர் தெரிவித்துள்ளார். #KKRvsCSK #IPL2019
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்சின் அதிரடி நீடிக்கிறது. அந்த அணி கொல்கத்தாவை மீண்டும் வீழ்த்தியது.

    ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது.

    தொடக்க வீரர் கிறிஸ் லின் 51 பந்தில் 82 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரியும், 6 சிக்சர்களும் அடங்கும். அவரது அதிரடியை பின்கள வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இம்ரான்தாகீர் 27 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ‌ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், சாட்னர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 162 ரன் இலக்கை எடுத்தது. 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ரெய்னா 42 பந்தில் 58 ரன்னும், (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா 17 பந்தில் 31 ரன்னும் (5பவுண்டரி), எடுத்தனர். சுனில் நரேன், பியூஸ்சாவ்லா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    சென்னை அணி பெற்ற 7-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்றது.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற இம்ரான்தாகீர் கூறியதாவது:-

    கேப்டன் டோனியின் அறிவுரைப்படிதான் நான் பந்து வீசினேன். அவரது ஆலோசனை எப்போதுமே பலனை அளிக்கும். அவர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான பாராட்டு எல்லாம் அவரைதான் சாரும்.

    எப்படி பந்து வீச வேண்டும் என்பது பற்றி ஆலோசனை வழங்குவார். கேப்டனின் அறிவுரையை நான் அப்படியே பின் பற்றினேன்.

    நான் பணியை நேசித்து செய்கிறேன். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை உருவாக்கி வருகிறோம்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ஒருவர் மீது மற்றவர் மதிப்பதே காரணம். எனது விருப்பத்துக்கு ஏற்றவாறு செயல்களை கேப்டன் அனுமதிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தானை சேர்ந்த தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் கழற்பந்து வீரரான இம்ரான் தாகீர் 40 வயதிலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். நேற்று 4 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் அவர் 13 விக்கெட்டை தொட்டு 2-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

    மற்றொரு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீரர் ரபடா (டெல்லிகேப்டல்ஸ்), 17 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.

    சூப்பர் கிங்ஸ் அணி 9-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 17-ந்தேதி சந்திக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2-வது முறையாக சென்னையிடம் வீழ்ந்தது. ஒட்டு மொத்தத்தில் 4-வது தோல்வி ஏற்பட்டது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் பெங்களூரை வருகிற 19-ந்தேதி எதிர்கொள்கிறது. #KKRvsCSK
    ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகீர் ‘ஹாட்ரிக்’ விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.#SAvZIM #ZIMvSA #ImranTahir
    ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இதில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 4-வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    இதற்கு முன்பு லாங்வெல்ட் (2005), டுமினி, ரபடா (2015) ஆகியோர் ஹாட்ரிக் சாதனை புரிந்து இருந்தனர்.

    இந்த ஆட்டத்தில் இம்ரான் தாகீர் 24 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். #SAvZIM #ZIMvSA #ImranTahir
    ×