search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா பாகிஸ்தான் எல்லை"

    • கதுவா அருகே இருக்கும் குக்கிராமத்தில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு மிகப்பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியது.
    • டிரோன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட குண்டு எல்லைக்கு அருகே தவறாக வீசப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள காஷ்மீரின் கதுவா பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. கதுவா அருகே இருக்கும் குக்கிராமத்தில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு மிகப்பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியது. இதனால் உள்ளூர் மக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.

    டிரோன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட குண்டு எல்லைக்கு அருகே தவறாக வீசப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் பற்றி அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு கிடைத்த மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • நபி நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து ட்ரோனை கைப்பற்றினர்.
    • இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டாரில் உள்ள, இந்தியா -பாகிஸ்தான் சர்வதேச எல்லையோர பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லை பகுதியை நோக்கி ஒரு ட்ரோன் பறந்து வந்ததை கவனித்தனர்.

    உஷாரான எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், அந்த ட்ரோனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ட்ரோன் பாகிஸ்தான் நோக்கி திரும்பிச் சென்றது. ஆனால் அதற்குள் ட்ரோன் விழுந்துவிட்டது. நபி நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து அந்த ட்ரோனை கைப்பற்றினர். 6 இறக்கைகளுடன் கூடிய அந்த ட்ரோனில் ஒரு ஏகே ரக துப்பாக்கி, 2 மேகசின்கள் மற்றும் 40 ரவுண்டு சுடக்கூடிய புல்லட்டுகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

    ×