search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்"

    ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘மைக்ரோசாட்-ஆர்’, ‘கலாம் சாட்’ ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. #PSLVC44 #ISRO
    சென்னை:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் இன்று 11.37 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த 690 கிலோ எடைகொண்ட ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோள், ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு மற்றும் ரிபாத் ஷரூக், ஸ்ரீமதி கேசன் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து மிகச்சிறிய அளவில் 34 கிராம் எடையில் தயாரித்துள்ள ‘கலாம் சாட்’ என்ற செயற்கை கோள் ஆகியவற்றை சுமந்தபடி விண்ணில் பாய்கிறது.

    பூமியில் இருந்து 274.12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புவி வட்டப்பாதையில் ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோளும், 450 கிலோ மீட்டர் தூரத்தில் ‘கலாம் சாட்’ செயற்கை கோளும் நிலைநிறுத்தப்படுகிறது. ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோள் பூமியை கண்காணிக்கவும், ‘கலாம் சாட்’ செயற்கை கோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.

    பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்ட 4 நிலைகளை கொண்டது. முதல் நிலையில் 139 டன் திட எரிபொருள் கொண்ட மிகப்பெரிய ராக்கெட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 2-வது நிலையில் 42 டன் திரவ எரிபொருள் கொண்ட ‘விகாஸ்’ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 3-வது நிலையில் 7.65 டன் திட எரிபொருள் கொண்ட ராக்கெட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. கடைசி நிலையில் திரவ எரிபொருளில் இயங்கும் 2 ராக்கெட் மோட்டார்களின் தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளன. இந்த திரவ எரிபொருள்களின் மொத்த எடை 2.5 டன் ஆகும்.

    இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் 53 இந்திய செயற்கை கோள்களையும், 269 வெளிநாட்டு செயற்கை கோள்களையும் விண்ணில் ஏவி உள்ளது. பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டானது இஸ்ரோ நிறுவனத்தின் பி.எஸ்.எல்.வி. ரகத்தின் 46-வது ராக்கெட் ஆகும்.

    செயற்கை கோள்களின் சுற்று வட்டப்பாதையை அதிகரிக்கும் வகையிலான பி.எஸ்.எல்.வி.-டி.எல். என்ற புதிய தொழில்நுட்பம் முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும், இதுவரையில் ராக்கெட்டுகளின் 4-வது நிலையில் செயற்கை கோள்கள் பொருத்தப்பட்டது இல்லை. முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டின் 4-வது நிலையில் 36 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான ‘கலாம் சாட்’ செயற்கை கோள் பொருத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சரியாக நேற்றிரவு 11.37க்கு 2 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் செயற்கைக்கோள்கள் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.   

    இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் 46வது ராக்கெட் இதுவாகும்.

    மேலும் இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், உலகிலேயே மிகவும் இலகுரக செயற்கைக்கோளை உருவாக்கிய மாணவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.  மேலும் அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார். #PSLVC44 #ISRO  
    ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘மைக்ரோசாட்-ஆர்’, ‘கலாம் சாட்’ ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. #PSLVC44 #ISRO
    சென்னை:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் இன்று (வியாழக்கிழமை) இரவு 11.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த 690 கிலோ எடைகொண்ட ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோள், ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு மற்றும் ரிபாத் ஷரூக், ஸ்ரீமதி கேசன் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து மிகச்சிறிய அளவில் 34 கிராம் எடையில் தயாரித்துள்ள ‘கலாம் சாட்’ என்ற செயற்கை கோள் ஆகியவற்றை சுமந்தபடி விண்ணில் பாய்கிறது.

    பூமியில் இருந்து 274.12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புவி வட்டப்பாதையில் ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோளும், 450 கிலோ மீட்டர் தூரத்தில் ‘கலாம் சாட்’ செயற்கை கோளும் நிலைநிறுத்தப்படுகிறது. ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோள் பூமியை கண்காணிக்கவும், ‘கலாம் சாட்’ செயற்கை கோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.

    பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்ட 4 நிலைகளை கொண்டது. முதல் நிலையில் 139 டன் திட எரிபொருள் கொண்ட மிகப்பெரிய ராக்கெட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 2-வது நிலையில் 42 டன் திரவ எரிபொருள் கொண்ட ‘விகாஸ்’ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 3-வது நிலையில் 7.65 டன் திட எரிபொருள் கொண்ட ராக்கெட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. கடைசி நிலையில் திரவ எரிபொருளில் இயங்கும் 2 ராக்கெட் மோட்டார்களின் தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளன. இந்த திரவ எரிபொருள்களின் மொத்த எடை 2.5 டன் ஆகும்.

    இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் 53 இந்திய செயற்கை கோள்களையும், 269 வெளிநாட்டு செயற்கை கோள்களையும் விண்ணில் ஏவி உள்ளது. பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டானது இஸ்ரோ நிறுவனத்தின் பி.எஸ்.எல்.வி. ரகத்தின் 46-வது ராக்கெட் ஆகும்.

    செயற்கை கோள்களின் சுற்று வட்டப்பாதையை அதிகரிக்கும் வகையிலான பி.எஸ்.எல்.வி.-டி.எல். என்ற புதிய தொழில்நுட்பம் முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை பரிசோதிக்கும் வகையில், மாணவர்கள் தயாரித்த ‘கலாம் சாட்’ செயற்கை கோள் பி.எஸ்.எல்.வி.-டி.எல். தொழில்நுட்ப உதவியுடன் 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

    மேலும், இதுவரையில் ராக்கெட்டுகளின் 4-வது நிலையில் செயற்கை கோள்கள் பொருத்தப்பட்டது இல்லை. முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டின் 4-வது நிலையில் 36 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான ‘கலாம் சாட்’ செயற்கை கோள் பொருத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டின் 28 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 7.37 மணிக்கு தொடங்கியது.  #PSLVC44 #ISRO 
    பிஎஸ்எல்வி - சி44 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை இரவு 11.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. #PSLVC44 #ISRO
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) செயற்கை கோள்களை சுமந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது.

    இதற்கிடையே பி.எஸ்.எல்.வி. சி44 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை இரவு 11.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

    ஹாம்ரேடியோ சேவைக்காக மாணவர்கள் தயார் செய்த சிறிய ரக கலாம் சாட் மற்றும் இஸ்ரோ தயாரித்த மைக்ரோசாட்- ஆர் ஆகிய 2 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி.-சி 44 ராக்கெட் சுமந்து செல்கிறது.

    4 நிலைகளை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 274.12 கி.மீட்டர் தூரத்தில் விண்ணில் நிலை நிறுத்தப்படுடுறது. இது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் 46-வது ராக்கெட் ஆகும்.

    ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று மாலை தொடங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 29-ந்தேதி பி.எஸ்.எல்.வி.- சி343 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    அதில் வனப்பகுதி, வேளாண்மை, உள்நாட்டு நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் ஹைசிஸ் என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. #PSLVC44 #ISRO
    ×