search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வம்சாவளி கணவர்"

    நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்திய வம்சாவளி கணவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. #Indianoriginman #7yearsjailed #stabbingpregnantwife #stabbingwife
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளி நபரான ஜெயசீலன் சந்திரசேகர்(30) என்பவர் விலைமாதாக முன்னர் தொழில் செய்துவந்த மயூரி(27) என்பவரை விரும்பி கடந்த 2013-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்துக்கு பின்னர் கணவருக்கு ஒழுக்கமான மனைவியாக வாழ்ந்துவந்த மயூரி, கடந்த ஆண்டில் தனது முன்னாள் காதலரும், விபச்சார தரகருமான ஒருவருடன் மீண்டும் நட்பை புதுப்பித்து வந்ததாக நம்பிய ஜெயசீலன் சந்திரசேகர், தனது மனைவி வீட்டைவிட்டு வெளியே செல்ல தடை விதித்தார்.

    மேலும், சந்தேக கண்ணோட்டத்துடன் மயூரியை பார்க்க தொடங்கியதால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை, சச்சரவு வலுத்து வந்தது. இதற்கிடையில், மயூரி கருத்தரித்தார். அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை யார்? என்பது தொடர்பாக மேலும் தகராறு அதிகரித்தது.

    கணவரின் கொடுமையை தாங்க முடியாத மயூரி, வீட்டைவிட்டு வெளியேறினார். முன்னர், தன்னுடன் விபசார தொழிலில் ஈடுபட்டிருந்த தோழிகள் வீட்டில் தஞ்சமடைந்தார்.

    இதனால், ஆத்திரமடைந்த ஜெயசீலன் சந்திரசேகர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி மயூரியை சரமாரியாக கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார். வயிறு மற்றும் கழுத்து பகுதியில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த மயூரியின் வயிற்றில் வளரும் குழந்தை இந்த தாக்குதலில் காயமடையாமல் தப்பியது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஜெயசீலன் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 6 பிரம்படிகளும் தண்டனையாக விதித்து தீர்ப்பாளித்தார். #Indianoriginman #7yearsjailed  #stabbingpregnantwife  #stabbingwife
    ×