search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஏ அணி"

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டி, மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. #WIAvsINDA
    இந்திய கிரிக்கெட் ‘ஏ’ அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 நாட்கள் கொண்ட மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    முதல் ஒருநாள் போட்டி ஜூலை 11-ந் தேதி நடக்கிறது. ஆகஸ்டு 9-ந் தேதி வரை இந்திய ‘ஏ’ அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒரு நாள் போட்டி தொடருக்கு மனிஷ் பாண்டே கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.



    அணியில் பிரித்விஷா, மயங்க் அகர்வால், உஸ்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், அனுமன் விகாரி, ரி‌ஷப் பந்த், ராகுல் சாகர், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குருணால் பாண்டியா, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, கலீல் அகமது, அவஷ்கான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

    டெஸ்ட் தொடருக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் ஈஸ்வரன், சகா, ஷிவம் துபே, உஸ்மான் கில், பிரியங் பஞ்சால், கவுதம், பரத், நதீம், மயங்க் மார்கண்டே, சைனி, முகமது சிராஜ், ‌ஷர்துல் தாகூர், அவெஷ்கான் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை ‘ஏ’ அணியில் இருந்து விடுவித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #RohitSharma
    மும்பை:

    ரஹானே தலைமையிலான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவடைந்ததும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும் இந்திய ‘ஏ’ அணியுடன் இணைந்து 16-ந்தேதி மவுன்ட் மாங்கானுவில் தொடங்கும் முதலாவது 4 நாள் போட்டியில் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு அறிவுறுத்தியது. இதை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை ‘ஏ’ அணியில் இருந்து நேற்று விடுவித்தது.

    20 ஓவர் போட்டித் தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி நாளை மறுதினம் மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது. அந்த அணியுடன் இணைந்து ரோகித் சர்மாவும் கிளம்புவார்.
    ×