search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஆண்கள் ஹாக்கி"

    • பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக்‌ஷெட்டி ஜோடி இன்று இறுதிப் போட்டியில் களம் காணுகிறது.
    • டேபிள் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டி மாலை 4.25 மணிக்கு நடக்கிறது.

    காமன்வெல்த் விளையாட்டில் ஆண்கள் ஹாக்கியில் தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டி இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இதில் இந்தியா தங்கம் வெல்லுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி லீக் ஆட்டங்களில் 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது.

    அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவை 3-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா லீக் ஆட்டத்தில் தான் மோதிய 4 போட்டியிலும் வெற்றி பெற்றது.

    முன்னதாக மதியம் 1.20 மணிக்கு பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து-மைக்கேல் லீ (கனடா) மோதுகிறார்கள்.

    மதியம் 2.10 மணிக்கு நடக்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் லக்‌ஷயா சென் (இந்தியா)-ஜி யாங் என்ஜி (மலேசியா) மோதுகிறார்கள்.

    பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக்‌ஷெட்டி ஜோடி இன்று இறுதிப் போட்டியில் களம் காணுகிறது. இப்போட்டி மதியம் 3 மணிக்கு நடக்கிறது.

    மதியம் 3.35 மணிக்கு டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சத்யன்-பால் டிரிக்ஹால் (இங்கிலாந்து) மோதுகிறார்கள்.

    டேபிள் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டி மாலை 4.25 மணிக்கு நடக்கிறது. இதில் இந்திய வீரர் சரத் கமல்-இங்கிலாந்தின் லியாம் பிட்ச்போர்ட் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    ×