search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைக்கால ஜாமீன்"

    ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சக்சேனா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. #AgustaWestlandCase #RajivSaxena
    புதுடெல்லி:

    முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடாக ரூ.3,600 கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக துபாய் வர்த்தக பிரமுகர் ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டார்.

    அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரித்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. இதில் அவருக்கு இருதய கோளாறும், ரத்த புற்றுநோயும் இருப்பது தெரிந்தது. சிகிச்சை பெறுவதற்காக ராஜீவ் சக்சேனா ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதனை அமலாக்கத்துறையும் ஆதரித்தது. எனவே அவருக்கு ஒரு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. அவரது உடல்நிலை பற்றிய விரிவான அறிக்கை தாக்கல் செய்ய எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு உத்தரவிட்டு, வழக்கை 22-ந்தேதிக்கு கோர்ட்டு ஒத்திவைத்தது. #AgustaWestlandCase #RajivSaxena

     
    ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. #IRCTCScam #Lalu
    புதுடெல்லி:

    ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.


     
    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசியின் அப்போதைய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் லாலு, மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது.

    இந்நிலையில், இவ்வழக்கில் ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அனைவருக்கும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

    இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, லாலுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாக அறிவித்தார்.

    ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #IRCTCScam #Lalu
    வங்காளதேசத்தில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற வன்முறைக்கு தூண்டுகோலாக இருந்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 6 மாத ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. #KhaledaZia #Bangladesh
    டாக்கா:

    வங்காளதேசத்தில் 2015-ம் ஆண்டு அரசுக்கு எதிராக மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த விபத்தில் சுமார் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து இந்த வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீது வன்முறையை தூண்டியதாக கைது செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், குமில்லா சிறப்பு நீதிமன்றத்தில் கலிதா ஜியா சார்பில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 6 மாத இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளனர். #KhaledaZia #Bangladesh
    தினகரன் சகோதரி சீதளதேவிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
    புதுடெல்லி:

    சசிகலாவின் அக்கா மகளும், டி.டி.வி.தினகரன் சகோதரியுமான சீதளதேவியின் கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவர் ரிசர்வ் வங்கியில் பணியாற்றியபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக கூறி பாஸ்கரன், சீதளதேவி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் சீதளதேவிக்கு 3 ஆண்டுகளும், எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டும் தண்டனையை உறுதிசெய்ததால் இருவரும் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். தண்டனையை நிறுத்திவைக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்ததால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சீதளதேவி மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இடைக்கால ஜாமீன் பெற்றார்.

    இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய இருவார காலஅவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சீதளதேவிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர். 
    ×