search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணித்திருவிழா"

    • இறைவன் உலா வருவதற்கு பயன்படுத்தும் வாகனமாகும்.
    • பரங்கி நாற்காலி வாகனத்தில் அய்யா வைகுண்டர் உலா வருகிறார்.‌

    இன்று ஸ்ரீ வில்லிபுத்தூர், பங்குனி உற்சவத்தில் இரட்டை பரங்கி நாற்காலி வாகனத்தில் ரெங்கமன்னாரும் ஆண்டாள் நாச்சியாரும் பவனி வருகின்றனர். அது என்ன பரங்கி நாற்காலி சேவை? பரங்கி நாற்காலி என்பது வைணவ கோயில்கள் சிலவற்றில் இறைவன் உலா வருவதற்கு பயன்படுத்தும் வாகனமாகும்.

    இந்த வாகனம் 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்கள் பயன்படுத்திய பெரிய சதுர வடிவிலான பரங்கி நாற்காலியை போன்று செய்யப்பட்டது. தென் தமிழகத்தின் பல வைணவ ஆலயங்களில் இந்த வாகனம் உண்டு. குறிப்பாக, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இருக்கும் பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தில் பரங்கி நாற்காலி வாகனம் பயன்படுத்தப்படுகிறது.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா திருக்குறுங்குடி நம்பி கோவிலில் பங்குனி பிரமோற்சவம் திருவிழா முதல் நாள் இரவில் பெருமாள் பரங்கி நாற்காலியில் உலா வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆவணித் திருவிழா இரண்டாம் நாள் இரவு பரங்கி நாற்காலி வாகனத்தில் அய்யா வைகுண்டர் உலா வருகிறார். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் – ஸ்ரீ ரெங்கமன்னார் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவின் ஆறாம் நாளில் ஆண்டாள் நாச்சியார், ரங்கமன்னார் இருவரும் இரட்டை பரங்கி நாற்காலி வாகனத்தில் உலா வருகிறார். அந்த சேவை இன்று.

    ×