search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனைக்"

    • நாமக்கல் மண்டலம் சார்பாக மத்திய செயற்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முசிறி, தலைவாசல், ஆத்தூர், ராசிபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய பகுதிகளை சார்ந்த முட்டைக் கோழி பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல மற்றும் மண்டலத்துக்குட்பட்ட 7 வட்டாரக்குழு உறுப்பி னர்கள் மற்றும் நாமக்கல் மண்டலம் சார்பாக மத்திய செயற்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முசிறி, தலைவாசல், ஆத்தூர், ராசிபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய பகுதிகளை சார்ந்த முட்டைக் கோழி பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் பேசும் போது, என்.இ.சி.சி. விலையை விட, முட்டை வியாபாரிகள் அளவுக்கு அதிகமான மைனஸ் விலையில் கொள்முல் செய்கின்றனர். இதனால் பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது என்று கவலை தெரிவித்தனர். மைனஸ் விலையை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது அல்லது முழுமையாக நீக்குவது என ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் இன்று 12-ந் தேதி முதல் ஒரு முட்டைக்கு என்இசிசி விலையை விட, முட்டை வியாபாரிகளுக்கு 40 பைசா மட்டுமே மைனஸ் செய்து விற்பனை செய்வது என்று நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இந்த மைனஸ் 40 என்ற அளவிற்கு மிகாமல் விற்பனை செய்யவேண்டும். வியாபாரிகள் எவரேனும் 40 பைசா என்ற மைனசுக்கு மேல், விலை குறைத்து கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள், அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதையொட்டி, நாமக்கல் மண்டலத்திற்குட்பட்ட 7 வட்டார குழுத் தலைவர்க ளின் செல்போன் நம்பர்கள் அறிவிக்கப்பட்டன. என்.இ.சி.சி. நிர்ணயம் செய்த விலையை விட 40 பைசாவிற்கு மேல் மைனஸ் விலை கேட்டால் அந்த வட்டாரக் குழு தலைவர்களை தொடர்புகொண்டு புகார் செய்யலாம். இந்த பிரச்சினையில் பண்ணையாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று என்.இ.சி.சி. மண்டல தலைவர் செல்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • நாமக்கல் நகர மளிகை வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் குமரன் ஹோட்டலில் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • வரும் காலங்களில் கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. பில்லுடன் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் நகர மளிகை வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் குமரன் ஹோட்டலில் சங்க தலைவர் பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிகாரிகள் மளிகை கடைகளில் மேற் கொள்ளும் திடீர்சோதனை குறித்தும். வரும் காலங்களில் கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. பில்லுடன் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் ஆடிட்டர் அருண்குமார் கலந்து கொண்டு ஜி.எஸ்.டி. வரி பில் மூலம் விற்பனை செய்வதுகுறித்து வியாபாரிகளுக்கு விளக்கம் அளித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பின் நாம க்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் மற்றும் மாவட்ட , நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×